வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலக சுகாதார அமைப்பில் (WHO) இருந்து அதிரடியாக வெளியேறியது அமெரிக்கா!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா விவகாரத்தை முன்வைத்து உலக சுகாதார அமைப்பில் (WHO) இருந்து அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா வெளியேறி உள்ளது.

Recommended Video

    Coronavirus Spread In Air? | Covid-19 airborne threat | Experts Warning

    ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் அமைப்பு உலக சுகாதார நிறுவனம். கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக உரிய முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை உலக சுகாதார அமைப்பு வெளியிடவில்லை என்பது அமெரிக்காவின் புகார்.

    US formally withdraws from WHO

    கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவக் கூடியது என்பதை சீனா மறைத்தது; சீனாவுக்கு ஆதரவாகவே உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது என்பதும் அமெரிக்கா முன்வைத்த புகார். இருப்பினும் இந்த புகார்களை உலக சுகாதார அமைப்பு நிராகரித்து வந்தது.

    ஒருகட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கான நிதியை நிறுத்துவோம் என அமெரிக்கா மிரட்டல் விடுத்தது. பின்னர் கொரோனாவை தடுக்கும் மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியை விரைவாக உலக சுகாதார அமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்கிற கெடுவையும் அமெரிக்கா விதித்தது.

    தமிழகத்தில் மேலும் 3,616 பேருக்கு தொற்று.. சென்னையில் நல்ல மாற்றம்.. சரசரவென குறையும் கொரோனா!தமிழகத்தில் மேலும் 3,616 பேருக்கு தொற்று.. சென்னையில் நல்ல மாற்றம்.. சரசரவென குறையும் கொரோனா!

    இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதற்கான முறைப்படியான நடவடிக்கைகளை அமெரிக்கா அதிரடியாக தொடங்கிவிட்டது. அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளுக்காக கமிட்டியில் இடம்பெற்றுள்ள மூத்த செனட்டர் Robert Menendez தமது ட்விட்டர் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தி பதிவிட்டுள்ளார்.

    தமிழகத்தில் மேலும் 3,616 பேருக்கு தொற்று.. சென்னையில் நல்ல மாற்றம்.. சரசரவென குறையும் கொரோனா!

    English summary
    President Donald Trump has formally withdrawn the United States from the World Health Organization.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X