வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அமெரிக்கா பச்சைக்கொடி.. நிறைவேறியது கிரீன் கார்டு மசோதா

Google Oneindia Tamil News

Recommended Video

    Green Card : இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! நிறைவேறியது கிரீன் கார்டு மசோதா- வீடியோ

    வாஷிங்டன்: அமெரிக்காவில் பணிக்காக செல்லும் வெளிநாட்டினருக்கு அந்நாட்டில் நிரந்தரமாக வாழ வழங்கப்படும் கிரீன் கார்டை 7 சதவீதம் அளவுக்குதான் வழங்கவேண்டும் என்ற உச்சவரம்பை நுக்கும் மசோதா அந்நாட்டு பிரநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது. இதனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திறமை வாய்ந்த பணியாளர்கள் எந்த நாட்டில் இருந்த அள்ளிக்கொண்டும் போகிறது அமெரிக்கா. அப்படி அமெரிக்கா வந்து பணியாற்ற வரும் வெளிநாட்டவர் ஹெச்1பி விசா மூலம் அங்கு செல்கிறார்கள்.

    பெரும்பாலும் உயர் திறன் உடைய ஐடி பணியாளர்கள் தான் அமெரிக்கா சென்று பணியாற்றுகிறார்கள். அங்கேயே வசிக்கவும் விரும்புகிறார்கள்.

    விஸ்வரூப வேட்டை... அதிமுகவை தொடர்ந்து திமுக எம்.பி.க்களுக்கும் பாஜக குறி? விஸ்வரூப வேட்டை... அதிமுகவை தொடர்ந்து திமுக எம்.பி.க்களுக்கும் பாஜக குறி?

    7 சதவீதம் பேர் மட்டுமே

    7 சதவீதம் பேர் மட்டுமே

    அவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்க, நிரந்தர குடியுரிமைக்கான 'கிரீன் கார்டு பெற வேண்டும். ஆனால் தற்போது உள்ள அமெரிக்க சட்டப்படி பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் 7 சதவீதம் பேர் மட்டுமே கிரீன் கார்டு பெற முடியும். இதனால் பல ஆண்டுகள் பணியாற்றினாலும் கிரீன் கார்டு பெற முடியாமல் பல அமெரிக்க வாழ் இந்தியர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    7 சதவீதம் விதி தளர்வு

    7 சதவீதம் விதி தளர்வு

    இந்நிலையில் அமெரிக்காவில் வெளிநாட்டவர் நிரந்தரமாக வாழ வழங்கப்படும் கிரீன் கார்டை 7 சதவீதம் அளவு என்ற உச்சவரம்பை நீக்கும் வகையில் உயர்திறன் கொண்ட குடியயேற்றவாசிகள் சட்டம் 2019 என்ற மசோதா நேற்று முன்தினம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 பேரில் 365 பேர் ஆதரவு தெரிவித்தனர். 65 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர்.

    குடும்பமாக வாங்கலாம்

    குடும்பமாக வாங்கலாம்

    இதன் மூலம் இந்த மசோதா பெரும்பான்மை பிரதிநிதிதகள் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. இதன் மூலம் 7 சதவீதம் வெளிநாட்டவர் தான் ஆண்டுக்கு கிரீன் கார்டு பெற முடியும் என்ற உச்சவரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் குடும்பம் சார்ந்த கிரீன் கார்டுகளை பெறுவதற்கு 15 சதவீதமாக உயருகிறது.

    அதிபர் ஒப்புதல்

    அதிபர் ஒப்புதல்

    இந்த மசோதா செனட் சபையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் அதிபர் டிரம்பின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட உள்ளது. ஆண்டுக்கணக்கில் கிரீன் கார்டுக்காக காத்துக்கிடக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்த மசோதா நிறைவேறியதால் மிக மகிழ்ச்சியாக உள்ளார்கள். செனட் சபையிலும் விரைவில் நிறைவேற்றி சட்டத்தை எப்போது நடைமுறைப்படுத்துவார்கள் என்ற ஆவலுடன் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உள்ளார்கள்.

    English summary
    US House of Representatives passes Green Card bill amid, so will lift an existing 7% country cap on issuing green cards, now indians are very happy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X