வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லடாக் பாங்கோங் ஏரி பகுதிகளில் இந்தியாவை ஆத்திரமூட்ட திட்டமிட்டே சீனா ஊருவியது: அமெரிக்க உளவுத்துறை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: லடாக்கின் பாங்கோங் ஏரி பகுதியில் இந்தியாவை ஆத்திரமூட்ட வேண்டும் என திட்டமிட்டே சீனா ஊடுருவியதாக அமெரிகாவின் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    China ஊடுருவல் India- வை ஆத்திரமூட்ட தான் - America உளவுத்துறை

    கால்வன் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து இந்தியா-சீனா இடையே எல்லையில் யுத்த பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க இந்தியா- சீனா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.

    US intelligence reports on Chinas new incursion

    இந்த பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் எல்லையில் ராணுவ குவிப்பை சீனா தொடர்ந்து மேற்கொள்கிறது. இதேபோல் ஊடுருவல் நடவடிக்கைகளிலும் மும்முரமாக இருந்து வருகிறது சீனா.

    பாங்கோங் ஏரி பகுதியில் இந்திய எல்லையை தாண்டி சீனா 3 நாட்களில் 3 முறை ஊடுருவ முயன்றது. ஆனால் எல்லையில் அனைத்துக்கும் தயார் நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் நிற்பதை கண்டு திகைத்து தலைதெறிக்க பின்வாங்கி ஓடியது சீனா.

    உலகிலேயே மிகப் பெரிய கடற்படையாக விஸ்வரூபம் எடுக்கும் சீனா.. எச்சரிக்கிறது அமெரிக்கா!உலகிலேயே மிகப் பெரிய கடற்படையாக விஸ்வரூபம் எடுக்கும் சீனா.. எச்சரிக்கிறது அமெரிக்கா!

    இதனிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறும் நிலையில் பாங்கோங் ஏறி பகுதியில் சீனா ஊடுருவியது, இந்தியாவை ஆத்திரமூட்ட வேண்டும் என்ற திட்டமிட்ட சதி நோக்கம்தான் என்று அமெரிக்காவின் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் கடந்த கால ஊடுருவல்களும் இதேபோலதான் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    English summary
    According to the US intelligence Reports China deliberately provoked India with a new incursion into contested territory.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X