வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஈரான் உடன் அமெரிக்கா போர் புரியுமா.. பதவியை காப்பற்ற டிரம்ப் அடித்த அதிரடி ஸ்டண்ட்?

Google Oneindia Tamil News

Recommended Video

    ஈரான் - அமெரிக்கா என்ன தான் பிரச்னை... இவர்களில் யார் பலசாலி ?

    வாஷிங்டன்: இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியுமான ஜெனரல் காசெம் சுலைமானியை மனிதர்களே இல்லாமல் ட்ரோனை வைத்து ட்ரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்க ராணுவம் கொன்றது.

    இதனால் கொதித்தொழுந்த ஈரான், ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் 5000 படை வீரர்களின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் 80 பேர் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியானது. ஆனால் தாக்குதல் நடந்தது உண்மை என்றும் யாரும் சாகவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    இதனிடையே இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இருநாடுகளும் மோதிக்கொள்ளும் நிலை உருவானது. டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்க தலைவர்கள் ஈரானை இல்லாமல் செய்துவிடுவோம் என்ற ரேஞ்சில் மிரட்டிக் கொண்டிருந்தனர்.

    சுலைமானியை கொன்ற அமெரிக்காவின் MQ-9 ட்ரோன்.. உலகிலேயே எவ்வளவு பயங்கரமானது தெரியுமா? சுலைமானியை கொன்ற அமெரிக்காவின் MQ-9 ட்ரோன்.. உலகிலேயே எவ்வளவு பயங்கரமானது தெரியுமா?

    மேல் நடவடிக்கை இல்லை

    மேல் நடவடிக்கை இல்லை

    இன்னொரு பக்கம் ஈரான் மீண்டும் அணு ஆயுத செரிவூட்டலை தொடங்குவதாக அறிவித்திருக்கிறது. அதேநேரம் அமெரிக்கா மற்றும் ஈரான் இரு நாடுகளுமே நிதானத்தை கடைபிடிக்கின்றன. அதற்கு மேல் நடவடிக்கைகயில் இருநாடுகளுமே ஈடுபடவில்லை.

    டிரம்ப் நடவடிக்கை இல்லை

    டிரம்ப் நடவடிக்கை இல்லை

    அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் அரசு ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் இது வரை அதற்கான எந்த நடவடிக்கையையும் டிரம்ப் எடுக்கவில்லை. அதேநேரம் ஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஐநாவுக்கு அமெரிக்கா கடிதமும் எழுதி இருக்கிறது. தற்காப்புக்காகவே சுலைமானியை கொன்றோம் என்று தெரிவித்திருக்கிறது.

    செனட் சபையில் பலம்

    செனட் சபையில் பலம்

    சரி அமெரிக்காவில் என்ன நிலவரம் என்று விசாரித்தால், டிரம்ப் குடியரசு கட்சியை சேர்ந்தவர். இந்த கட்சிக்கு நாடாளுமன்றத்தின் செனட் சபையில் பெரும்பான்மை இருக்கிறது. அதேநேரம் ஜனநாயக கட்சிக்கு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் அதிக ஆதரவு உள்ளது.

    டிரம்ப் தப்பித்தார்

    டிரம்ப் தப்பித்தார்

    அண்மையில் டிரம்பை பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றி அசிங்கப்படுத்தியது ஜனநாயக கட்சி. செனட் சபையில் பெரும்பான்மை இருந்ததால் டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து தப்பித்தார்.

    டிரம்ப் அடித்த ஸ்டண்ட்

    டிரம்ப் அடித்த ஸ்டண்ட்

    இந்நிலையில் தனது பதவியையும் நற்பெயரையும் காப்பாற்றும் ஸ்ட்ண்ட் ஆகவே ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதாகவும் அந்நாட்டால் அமெரிக்காவுக்கு ஆபத்து என்றும் கூறி தாக்க டிரம்ப் விரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்புகள் கடுமையாக இருக்கிறது. தேவையற்ற வேலை என்று எதிர்க்கட்சிகள் கொதிக்கின்றன. இன்னொரு பக்கம் பிரதிநிதிகள் சபையில் ஈரானுக்கு எதிராக டிரம்ப் நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் வகையில் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது செனட்சபையில் நிறைவேறுவது சந்தேகம் தான். எனினும் தற்போதைக்கு போருக்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.

    English summary
    U.S. and Iran Back Away From Open Conflic. why Trump pulls back from war with Iran
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X