வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்தாச்சு "விண் படை".. அண்ணன் டிரம்ப் அவர்களே.. அப்படியே வைரஸ் படையையும் ஆரம்பிங்க!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க விமானப்படைக்குள் Space Force என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.

இயற்கை உருவாக்கிக் கொடுத்த அழகான பூமியை முடிந்தவரை நாசம் செய்து நாஸ்தியாக்கி விட்டான் மனிதன். இன்னும் சில நூற்றாண்டுகளில் இந்த பூமி அழிந்து போகப் போகிறது. மனிதன் வாழத் தகுதியற்றதாகி விடும்.

இதையடுத்து அவனது கவனம் தற்போது தலைக்கு மேலே திரும்பியுள்ளது.. அதாவது விண்வெளியில் நமக்கான இடம் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்து விட்டான். கிரகம் கிரகமாக போய் ஏதாவது தேறுமா என்று தேடிப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.

விண் படை

விண் படை

இந்த நிலையில் அமெரிக்கா உலக நாடுகளிலேயே முதல் முறையாக விண்வெளி விமானப்படையை உருவாக்கி விட்டது. இனி எல்லாமே விண்வெளிதான் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதுதொடர்பான உத்தரவையும் அவர் பிறப்பித்துள்ளார்.

விண்வெளி தாக்குதல்கள்

விண்வெளி தாக்குதல்கள்

அமெரிக்க விமானப்படையின் ஒரு பிரிவாக இது செயல்படுமாம். உள்ளூர் சட்டம், சர்வதேச சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களுக்கேற்ப இது செயல்படும் வகையில் இதன் சட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளனவாம். விண்வெளியிலிருந்து வரும் தாக்குதல்களை சமாளிக்கும் வகையில் இந்தப் படை செயல்படுமாம்.

விண்வெளிக் கட்டமைப்பு

விண்வெளிக் கட்டமைப்பு

விண்வெளியில் செயல்படக் கூடிய கட்டமைப்புகளையும் உருவாக்கப் போகிறதாம் இந்த படை அணி. மேலும் விண்வெளியில் உள்ள அமெரிக்க செயற்கைக் கோள்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் இந்த புதிய படை மேற்கொள்ளுமாம்.

இனி இதுதான்

இனி இதுதான்

இந்த படையை தொடங்கி வைத்து அதற்கான உத்தரவில் கையெழுத்திட்ட பின்னர் டிரம்ப் கூறுகையில், இதுதான் எதிர்காலம். இதை நோக்கித்தான் நாம் போகப் போகிறோம். பிடிக்கிறதோ, இல்லையோ.. இதுதான் இனி எதிர்காலமாக இருக்கும். இனி அனைத்துமே விண்வெளியில்தான். அதற்கு நாம் தயாராக வேண்டும். நமது எதிரிகளை நாம் விண்ணில் சந்திக்க நேரிடும்போது இந்தப் படை நம்மை காக்கும் என்றார் அவர்.

வைரஸ் படை வருமா

வைரஸ் படை வருமா

அமெரிக்க படைகளைப் பொறுத்தவரை விமானப்படை, கடற்படை, ராணுவம் வரிசையில் தற்போது 6வது படைப் பிரிவாக இந்த விண்வெளிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல எதிர்காலத்தில் வைரஸ், பாக்டீரியா தாக்குதலை சமாளிக்க வைரஸ் படையையும் அமெரிக்கா உருவாக்குமா என்று தெரியவில்லை.. அதுகுறித்து டிரம்ப் எதையும் சொல்லவும் இல்லை!

English summary
USA has launched "Space Force" as its 6th military branch.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X