வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜூலை 23 முதல்.. அமெரிக்கா-இந்தியா இடையே பயணிகள் விமானச் சேவை துவக்கம்?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஜூலை 23 முதல் இந்தியாவுக்கு அமெரிக்க பயணிகள் விமானம் இயங்க அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக விமானச் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜூலை 23 முதல் அமெரிக்க-இந்தியா பயணிகள் விமானச் சேவைகளை மீண்டும் தொடங்க அமெரிக்க விமான கேரியர்களுக்கு இந்திய அரசு அனுமதி வழங்க ஒப்புக் கொண்டுள்ளது என்று அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸை காரணம் சொல்லி, இந்திய அரசு, அனைத்து பயணிகள் விமானச் சேவைகளையும் தடைசெய்தது.

காட்டுத் தீ போல பரவும் கொரோனா.. உலகம் முழுக்க.. வெறும் 100 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு பாதிப்புகாட்டுத் தீ போல பரவும் கொரோனா.. உலகம் முழுக்க.. வெறும் 100 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு பாதிப்பு

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இந்த நிலையில், இந்தியாவுக்கு இயக்கப்படும், சார்டர் சேவை விமான கேரியர்களை அனுமதிப்பதில்லை என ஜூன் மாதத்தில் அமெரிக்க போக்குவரத்துத் துறை குற்றம் சாட்டியிருந்தது. "நியாயமற்ற மற்றும் பாரபட்சமான நடைமுறைகளில்" இந்தியா ஈடுபடுவதாக குற்றம் சாட்டியது.

வாபஸ்

வாபஸ்

சார்டர் விமானங்களை இயக்கும் முன்னர் அங்கீகாரம் பெற, இந்திய விமான கேரியர்களின், அனுமதி கேட்டதை வாபஸ் பெறுவதாக அமெரிக்க போக்குவரத்துத் துறை கூறியதுடன், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் சார்டர் விமானங்களுக்கான ஏர் இந்தியா விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

கருத்து இல்லை

கருத்து இல்லை

அதேநேரம், அமெரிக்க விமான நிறுவனங்களையும் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குழு இது தொடர்பாக உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Recommended Video

    India, America மட்டுமல்ல.. 15 நாடுகளுடன் மோதும் China
    சிவில் போக்குவரத்து

    சிவில் போக்குவரத்து

    நமது நாட்டின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ட்விட்டரில் சர்வதேச சிவில் விமான நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்த முயன்று வருவதாகவும், சில விமான நிறுவனங்களில் இருந்து அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், இதேபோன்ற ஏற்பாடுகள் மேலும், மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    US Passenger Flights to India to Resume from July 23

    English summary
    The government of India has agreed to allow US air carriers to resume passenger services in the US-India market starting July 23, the US Transportation Department has said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X