வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகை மீண்டும் வழிநடத்துவோம்.. "அமெரிக்கா இஸ் பேக்".. உலக நாடுகளுக்கு பிடன் அனுப்பிய வலுவான மெசேஜ்!

Google Oneindia Tamil News

வாஷிங்க்டன்: உலகம் முழுக்க இருக்கும் நட்பு நாடுகள் உடனான நட்பை புதுப்பிப்போம், கருத்து வேறுபாடுகளை சரி செய்வோம், அமெரிக்கா மீண்டு வந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் பிடன் தனது முதல் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    அமெரிக்காவின் 46வது அதிபரானார் ஜோ பைடன்... துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்பு!

    அமெரிக்காவின் 46வது அதிபராக ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பதவி ஏற்றுள்ளார். வாஷிங்க்டன் டிசியில் உள்ள கேப்பிட்டல் கட்டிடம் முன் நடந்த பதவி ஏற்பு விழாவில் பிடன் இன்று பதவி ஏற்றார். பிடனுடன் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்றுள்ளார்.

    இதையடுத்து பிடன் மிகவும் உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்தினார். பிடன் தனது உரையில் உலக நாடுகள் அனைத்திற்கும் முக்கியமான செய்தி ஒன்றை தெரிவித்தார்.

    அமெரிக்கர்களாக ஒன்றிணைவோம்.. கன்னிப்பேச்சில் உணர்ச்சிவசப்பட்ட பிடன்.. வரலாற்று சிறப்புமிக்க உரை! அமெரிக்கர்களாக ஒன்றிணைவோம்.. கன்னிப்பேச்சில் உணர்ச்சிவசப்பட்ட பிடன்.. வரலாற்று சிறப்புமிக்க உரை!

    பிடன் உரை

    பிடன் உரை

    அமெரிக்க அதிபர் பிடன் தனது உரையில், அமெரிக்காவை பிளவுபடுத்தும் சக்திகளை நாம் முறியடிப்போம். இதுபோன்ற சக்திகள் புதிததல்ல. பல பிளவுகளை எதிர்கொண்டு அமெரிக்கா உறுதியாக உயர்ந்து நின்றுள்ளது. அனைத்து சோதனைகளையும் நாம் இனி ஒற்றுமையாக எதிர்கொள்வோம்.

    நிறவெறி

    நிறவெறி

    நிறவெறி , இனவெறி, மதவெறி, பயம், கோபம், வெறுப்பை துறந்து அமெரிக்கர்களாக ஒன்றைவோம். கொரோனாவால் உயிரிழந்த லட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். நம் முன் உள்ள அத்தனை சவால்களையும் கடந்து நல்ல எதிர்காலத்தை உருவாக்குவோம். நமக்கான சவால்களை எப்படி எல்லாம் கடக்கப் போகிறோம் என்பதை உலகமே பார்த்து கொண்டிருக்கிறது.

    ஒற்றுமை

    ஒற்றுமை

    அமெரிக்காவை, ஒவ்வொரு அமெரிக்கரையும் பாதுகாப்பேன் என உறுதிமொழி அளிக்கிறேன். கடவுள் இந்த தேசத்தை காப்பாற்றுவார்; கடவுள் நாட்டின் தடைகளை தகர்க்க துணை நிற்பார்.இந்த நன்னாளில் எல்லை கடந்து இருக்கும் உலக நாடுகளுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

     உலக நாடுகள்

    உலக நாடுகள்

    அமெரிக்க பல சோதனைகளை எதிர்கொண்டது. நாங்கள் அதை கடந்து வந்து இருக்கிறோம். சோதனைகள் அனைத்தையும் வலிமையாக எதிர்கொண்டு கடந்து வந்து இருக்கிறோம். நட்பு நாடுகள் உடனான நட்பை புதுப்பிப்போம். கருத்து வேறுபாடுகளை சரி செய்வோம்.

    கடந்த காலம்

    கடந்த காலம்

    கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்தையும், எதிர்காலத்தை சரி செய்ய முயற்சிப்போம். உலக நாடுகளுடன் மீண்டும் இணைந்து செயல்படுவோம். உலக நாடுகளை வழி நடத்தி சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வோம். அமெரிக்க மீண்டு வந்துவிட்டது, என்று பிடன் தனது உரையில் வலுவான மெசேஜ் அனுப்பி உள்ளார்.

    English summary
    US President Biden send a strong message out of the border to foreign nations in his inaugural speech.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X