வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிறவெறி, இனவெறிக்கு எதிரான வலிமையான குரல்.. அன்பை விதைக்கும் அதிபர் பிடனின் முதல் உரை.. அசத்தல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற ஜோ பிடன் தனது முதல் உரையில் நிறவெறிக்கும், இனவெறிக்கு எதிராக பேசியுள்ளார். மக்கள் அன்பையும், ஒற்றுமையையும் கடைபிடிக்க வேண்டும் என்று பிடன் பேசியுள்ளார்.

Recommended Video

    அமெரிக்காவின் 46வது அதிபரானார் ஜோ பைடன்... துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்பு!

    அமெரிக்காவில் புதிய அதிபர் பிடன் பதவி ஏற்பதற்கான விழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியாசு கட்சி வேட்பாளர் டிரம்ப்பை வீழ்த்து தேர்தலில் வென்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இன்று அமெரிக்க அதிபராக பதவி ஏற்று உள்ளார்.

    இந்த பதவி ஏற்பு விழா தற்போது நடந்து வருகிறது. அதிபர் டிரம்ப் ஏற்கனவே வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிவிட்டதால் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

    பேச்சு

    பேச்சு


    அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பிடன் மிகவும் வலிமையான உரையை இன்று நிகழ்த்தினார். பிடன் தனது பேச்சில் ஒற்றுமை குறித்தும், நிறவெறிக்கு எதிராகவும், கொரோனா குறித்தும், அமெரிக்க பாதுகாப்பு குறித்தும் பேசினார். பிடன் தனது உரையில், அமெரிக்காவின் நாள் இது.. ஜனநாயகத்துக்கான நாள் இது. அமெரிக்கா பல சவால்களை கடந்து வந்துள்ளது.

    போர்கள்

    போர்கள்

    பல போர்களை, மோதல்களை அமெரிக்க சந்தித்துள்ளது. ஆனால் அனைத்தில் இருந்தும் அமெரிக்கா மீண்டு வந்துள்ளது. 100 ஆண்டுகளுக்குப் பின் கொரோனா எனும் பெருந்தொற்று அமெரிக்காவை தாக்கி உள்ளது. கொரோனா பெருந்தொற்றால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

    நீதி

    நீதி

    அமெரிக்காவில் அனைவருக்குமான சமமான நீதி என்பதை தாமதப்படுத்தமாட்டோம். அரசியல் தீவிரவாதம், வெள்ளை இனவாதம் உள்ளிட்டவற்றை தூக்கி எறிய வேண்டிய தேவை உள்ளது. மக்கள் ஒற்றுமையாக இணைய வேண்டிய நேரம் இது. நிற வெறிக்கும், இன வெறிக்கும் எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும்.

     மோதல்கள்

    மோதல்கள்

    9/11 தொடங்கி சிவில் வார் வரை அனைத்தையும் பார்த்து, அனைத்தும் கடந்து அமெரிக்கா உயர்ந்து நிற்கிறது. அமெரிக்காவில் ஆட்சி மாற்றங்கள் அமைதியாக நடந்தன.. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் வன்முறை இங்கு நிகழ்ந்தது. இந்த மோதல்களையும் அமெரிக்கா கடந்து வரும். மக்கள் ஒன்றாக இணையும் காலம் வரும்.

     ஒற்றுமை

    ஒற்றுமை

    மக்கள் இடையே அன்பு பெருகும் காலம் வரும். அமெரிக்கர்களாகிய நாம் ஒன்றிணைந்து அனைத்து தீவிரவாதங்களையும் முறியடிக்க வேண்டும். அமெரிக்காவை தோல்வி அடைய நான் விட மாட்டேன். நாம் ஒன்றாக இணைந்து அமெரிக்காவிற்காக புதிய பயணத்தை தொடங்க வேண்டும், என்று ஜோ பைடன் தனது உரையில் குறிப்பிட்டார்.

    English summary
    US President Biden speaks for love and unity against racism in his inagural ceremony today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X