வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரலாற்று நிகழ்வு.. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது!

Google Oneindia Tamil News

வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு எதிரான 2வது கண்டன தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எம்பிக்கள் ஆதரவுடன் நிறைவேறியது. அந்த தீர்மானத்தை 232 எம்பிக்கள் ஆதரித்துள்ளனர். 197 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு டிரம்ப் தான் பொறுப்பு என குற்றம்சாட்டி அவரை பதவியில் இருந்து நீக்க அந்நாடடு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Enough lawmakers have cast votes to impeach President Trump again in a historic first

இந்த தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இந்திய நேரப்படி இரவு .7.30 மணிக்கு தொடங்கி விவாதம், அதிகாலை 2.30 மணி வரை நடந்தது. அதனைத்தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றம் (கேபிடல்) தாக்கப்பட்டற்காக டிரம்ப் மீது கொண்டுவரப்பட்டுள்ள டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு தொடங்கியது இப்போது எம்பிக்கள் வாக்களித்தார்கள்..

குற்றச்சாட்டுத் தீர்மானம் என்னவென்றால் ட்ரம் தான் நாடாளுமன்ற தாக்குதலுக்கான "கிளர்ச்சியைத் தூண்டினார்" என்பதாகும். தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் இதுவரை 232 எம்பிக்கள் ஆதரித்து வாக்களித்துள்ளனர். இதில் 10 குடியரசுக் கட்சியினரும் அடக்கம். மசோதாவை எதிர்த்து 197 பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு எதிரான 2வது கண்டன தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எம்பிக்கள் ஆதரவுடன் நிறைவேறி உள்ளது.

வன்முறை வேண்டாம்.. அமைதியாக இருங்கள்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் பரபர அறிக்கை வன்முறை வேண்டாம்.. அமைதியாக இருங்கள்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் பரபர அறிக்கை

கண்டனத் தீர்மானம் நிறைவேறினால், செனட் அவையில் அவர் மீது விசாரணை நடக்கும். செனட்டில் அவர் மீதான குற்றத்தை உறுதி செய்ய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. இதனால், குறைந்தது 17 குடியரசுக் கட்சியினர் டிரம்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். 2024ஆம் ஆண்டில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், அவரை மீண்டும் போட்டியிடவிடாமல் தடுப்பதற்கு பதவிநீக்க குற்றச்சாட்டு விசாரணையை செனட் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது..

English summary
The debate has ended, and the House is voting now on an impeachment resolution that would make Trump the first President in United States history to be impeached for a second time for his role in last week's Capitol attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X