வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடாதீர்கள்.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடாதீர்கள் என ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப்பின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாகவும் டிரம்பை வெற்றி பெற செய்ய ரஷ்ய அதிபர்கள் உதவியதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியது.

நரம்பில் ஓடும் அச்சம்.. சட்டமாகும் குடியுரிமை மசோதா.. இனி என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? நரம்பில் ஓடும் அச்சம்.. சட்டமாகும் குடியுரிமை மசோதா.. இனி என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?

ஏப்ரல் மாதம்

ஏப்ரல் மாதம்

இதுதொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான விசாரணைக் குழு 2 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தது. இதையடுத்து தனது அறிக்கையை கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

டிரம்ப் கடும் எச்சரிக்கை

டிரம்ப் கடும் எச்சரிக்கை

அந்த அறிக்கையில் ஜனாதிபதி தேர்தலில் டிரம்போ அவரை சேர்ந்தவர்களோ ரஷ்யாவுடன் சேர்ந்து சதி செய்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட கூடாது என ரஷ்யாவுக்கு டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை

அமெரிக்கா சென்றுள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கடந்த செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

டிரம்ப் ஆலோசனை

டிரம்ப் ஆலோசனை

அதில் செர்ஜியுடன் உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து டிரம்ப் ஆலோசனை நடத்தினார். அத்தோடு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ல அதிபர் தேர்தலில் தலையிட ரஷ்யா எந்தவித முயற்சியையும் எடுக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
US President Donald Trump warned Russia not to interfere in US elections in talks with Russia, says White house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X