வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா-அமெரிக்கா இடையே நல்லுறவு நீடிக்க டிரம்ப்-க்கு வாக்களியுங்க.. அமெரிக்கா வாழ் இந்தியர்கள் குழு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்கா இடையே நல்லுறவு நீடிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கே வாக்களிக்க வேண்டும் என்று அமெரிக்கா வாழ் இந்தியர்கள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சியின் வேட்பாளராக அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பிடனும் களத்தில் உள்ளனர்.

2016-இல் பொருளாதாரத்தில் பின்தங்கிய நகரங்களில் ஜெயிச்ச டிரம்புக்கு 2020-ல் படுதோல்வியாமே! பரபர சர்வே2016-இல் பொருளாதாரத்தில் பின்தங்கிய நகரங்களில் ஜெயிச்ச டிரம்புக்கு 2020-ல் படுதோல்வியாமே! பரபர சர்வே

பிடனுக்கு இந்தியர்கள் ஆதரவு

பிடனுக்கு இந்தியர்கள் ஆதரவு

அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக ஜனநாயகக் கட்சியில் அமெரிக்கா வாழ் இந்தியரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இதனிடையே ஜோ பிடனுக்கே இந்தியர்கள் ஆதரவு அதிகம் இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவித்தும் இருக்கின்றன.

டிரம்ப்க்கு வாக்களிக்க கோரிக்கை

டிரம்ப்க்கு வாக்களிக்க கோரிக்கை

இந்த நிலையில் Trump Victory Indian American Finance Committee அமெரிக்கா வாழ் இந்தியர்கள் டொனால்ட் டிரம்ப்க்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், காஷ்மீர் விவகாரத்தில் சீனாவை கடுமையாக எதிர்த்தவர் டொனால்ட் டிரம்ப். ஆகையால் இந்தியா- அமெரிக்கா இடையே நல்லுறவு நீடிக்க டிரம்ப்க்குதான் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

சீனாவை எதிர்க்கும் டிரம்ப்

சீனாவை எதிர்க்கும் டிரம்ப்

Indian Voices for Trump என்ற குழுவைச் சேர்ந்த ஶ்ரீதர் சைத்யாலா, 4 ஆண்டுகளில் டொனால்ட் டிரம்ப் திடமான முடிவுகளை மேற்கொண்டிருக்கிறார். இந்தியாவுக்கு ஆதரவாக நின்று சீனாவை கடுமையாக எதிர்த்தவர் டிரம்ப். அவருக்கு நமது ஆதரவை வழங்குவோம் என கூறியுள்ளார்.

காஷ்மீர் பிரச்சனை

காஷ்மீர் பிரச்சனை

டாக்ட்ர் சோபா சொக்கலிங்கம் கூறுகையில், காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு முழு ஆதரவை கொடுத்தவர் டிரம்ப். ஆகையால் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் டிரம்ப்பைத்தான் முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்றார்.

English summary
Indian-Americans have urged the community members across the country to support and vote for the Republican leader President Donald Trump.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X