• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பிடிவாதம் பிடிக்கும் டிரம்ப்.. வெளியேற மறுத்தால்.. எப்போது, எப்படி பதவியில் இருந்து விலக்கப்படுவார்?

|

வாஷிங்டன்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்தை தொடங்கி உள்ள நிலையில், அமைதியாக அதிகாரத்தை மாற்றும் நீண்ட வரலாறு அமெரிக்காவுக்கு உள்ளது என்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்தனர்

ட்ரம்ப் வெள்ளை மாளிகை அலுவலகத்தை விட்டுச்செல்ல இறுதி தேதி இருக்கிறதா?

கடந்த 3ம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் 290 எலக்ட்ரோல் வாக்குகள் பெற்று பெரும்பான்மை பெற்றதையடுத்து ஜோ பிடன் வெற்றி பெற்று இருக்கிறார்.. அதேநேரம் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

ஜனவரி 20ல் பதவியேற்பு

ஜனவரி 20ல் பதவியேற்பு

தற்போதைய நிலையில் இன்னும் சில மாகாணங்களில் தொடர்து வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வாக்காளர் குழு (எலக்ட்ரோல் வாக்குகள்) டிசம்பர் 14ம் தேதி ஒட்டெடுப்பு நடத்திய பிறகுதான் பிடன் 46வது அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார். எதிர்பார்த்தபடி பிடன் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால், அவர் ஜனவரி 20 ஆம் தேதி நண்பகலில் அதிபராக பதவியேற்பார் - இது அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்பட்ட தேதியாகும்.

பிடனின் வெற்றி

பிடனின் வெற்றி

இந்நிலையில் பிடனின் வெற்றியை ஏற்க மறுத்துள்ள ட்ரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், வழக்கு போடப்போவதாகவும் விடாப்பிடியாக உள்ளார். வெள்ளை மாளிகையில் வழக்கம் போல் கோல்ப் விளையாடுவது, பணிகளை கவனிப்பது என்று எப்போதும் போல் இருக்கிறார். அத்துடன் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்வதற்கான சட்டப்பணிகளை செய்து கொண்டிருக்கிறார். அவரது வழக்கறிஞர்கள் குழு ஆதாரங்களை திரட்டும் பணியில் தீவிரமாக இருக்கிறார்கள்.

காலக்கெடு உள்ளது

காலக்கெடு உள்ளது

இப்படியான ஒரு சூழ்நிலையில் ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அதிகாரத்தை மாற்ற முடியுமா?

ஆம். அதிகாரத்தை மாற்ற முடியும். பிடனின் அதிகார மாற்றத்தை மெதுவாக்க டிரம்பிற்கு ஒரு சில அதிகாரங்கள் உள்ளன. 1963 ஆம் ஆண்டின் அதிபர் மாறுதல் சட்டம் என்று அழைக்கப்படும் ஒரு சட்டம், அதிகாரத்தை மாற்றும் பணியை அரசு ஊழியர்களுக்கு முக்கியமாக்குகிறது. தரவு மற்றும் வரப்போகும் அதிபர்களுக்கான அணுகலை வழங்குவதற்கான காலக்கெடுவை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

வெற்றியாளர்களுக்கு உதவி

வெற்றியாளர்களுக்கு உதவி

சட்டத்தின் கீழ், கூட்டாட்சியை நிர்வகிக்கும் யு.எஸ். ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (ஜிஎஸ்ஏ) என்று அழைக்கப்படும் கூட்டாட்சி அமைப்பு. தேர்தலில் வெளிப்படையான வெற்றியாளரைக் குறிப்பிடும்போது, ​​அவர்கள் அதற்கான பணிகளில் ஈடுபடுவார்கள். வெற்றி பெற்ற அதிபருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

பிடனை ஏற்குமாறு கடிதம்

பிடனை ஏற்குமாறு கடிதம்

கடந்த ஞாயிறு அன்று மாற்றங்களின் வல்லுநர்கள், யு.எஸ். ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (ஜிஎஸ்ஏ) நிர்வாகி எமிலி மர்பிக்கு கடிதத்தை அனுப்பி, பிடனை வெற்றியாளராக அங்கீகரிக்குமாறு வலியுறுத்தினார்கள். இது தொடர்பாக ஜிஎஸ்ஏ அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், "அரசியலமைப்பில் வகுக்கப்பட்ட செயல்முறையின் அடிப்படையில் வெற்றியாளர் தெளிவாகத் தெரிந்தவுடன் வெளிப்படையான வெற்றிகரமான அதிபர் வேட்பாளரை ஜிஎஸ்ஏ கண்டறியும்" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரகசிய சேவை பிரிவு

ரகசிய சேவை பிரிவு

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பேராசிரியர் ராபர்ட் செஸ்னி இது பற்றி கூறும் போது, அமெரிக்க அரசியலமைப்பை ஆதரிக்க அரசாங்க அதிகாரிகள் சத்தியம் செய்கிறார்கள். டிரம்ப் என்ன சொன்னாலும் பொருட்படுத்தாமல், எலக்ட்ரோல் வாக்குகளில் வெற்றி பெற்றால் பெற்றால், பிடனை வரும் கால அதிபராக அங்கீகரிக்க வேண்டும். எலக்ட்ரோல் வாக்குகள் அல்லது நீதிமன்றம் வேறுவிதமாகக் கூறினால், இராணுவம், ரகசிய பிரிவு, எஃப்.பி.ஐ அல்லது அதிகாரத்துவத்தின் வேறு ஏதேனும் ஒரு பகுதி டிரம்புடன் சேர்ந்து செயல்படும் என்றெல்லாம் நம்ப தேவையில்லை. அப்படி செயல்பட வாய்ப்பு இல்லை என்றார்.

எப்படி வெளியேற்றப்படுவார்

எப்படி வெளியேற்றப்படுவார்

அதிகாரத்தில் இருந்து வெளியேற மறுத்தால் ராணுவம் ட்ரம்ப்பை வெளியேற்ற வருமா?

கடந்த ஆகஸ்ட் மாதம் ட்ரம்பை " வலுக்கட்டாயமாக" அகற்ற வேண்டும் என்று இரண்டு முன்னாள் ராணுவ அதிகாரிகள் குரல் எழுப்பினர். "டொனால்ட் டிரம்ப் தனது அரசியலமைப்பு பதவிக்காலம் முடிவடையும் போது பதவியை விட்டு வெளியேற மறுத்தால், அமெரிக்க இராணுவம் அவரை பலத்தால் அகற்ற வேண்டும், நீங்கள் அந்த உத்தரவை வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர். ஆனால் மற்றவர்களோ அத்தகைய நடவடிக்கையில் யு.எஸ். உளவு பிரிவு செயல்படும் என்று கூறியுள்ளனர், சட்ட அமலாக்க விஷயங்களில் இராணுவ வீரர்கள் விலகி இருக்க வேண்டும் என்றும் இதைக் கையாள்வதற்கான அரசியலமைப்பு செயல்முறைகள் எங்களிடம் உள்ளன, இராணுவம் இதில் எங்கும் வராது" என்று அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையின் இயக்குனர் கோரி ஷேக் கூறினார்.

அதன்பிறகு ரகசிய சேவை பிரிவு

அதன்பிறகு ரகசிய சேவை பிரிவு

டிரம்ப் உண்மையிலேயே வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மறுத்தால், ஜனவரி 20 அன்று அவர் ஒரு "மீறுபவர்" ஆகிவிடுவார் என்று பேராசிரியர் செஸ்னி கூறினார். ரகசிய சேவை பிரிவினர் வந்து அவரை வெளியே அழைத்துச் செல்வார்கள்," என்று அவர் கூறினார்.

 
 
 
English summary
US president election 2020: If Trump truly refused to leave the White House, on Jan. 20 he would become a “trespasser,” . the Secret Service would come and escort him out,”. .
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X