வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் தேசபக்தி கொண்ட அமெரிக்க பெண் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்... கமலா ஹாரிஸ்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சோசலிச அஜெண்டாவை முன்வைத்து செயல்படுவதாக ஆளும் குடியரசு கட்சியினர் வைத்த குற்றச்சாட்டை அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ், திட்டவட்டமாக மாறுத்தார். தான் நாட்டை நேசிக்கும் தேசபக்தி கொண்ட அமெரிக்க பெண்மணி என்று பெருமிதம் தெரிவித்தார். தன்னுடைய எண்ணங்கள் எப்போதும் அமெரிக்காவின் மதிப்புகளை பற்றி இருப்பதாகவும் தெரிவித்தார்.

55 வயதாகு்ம் கமலா ஹாரிஸ், கடந்த ஆண்டு வரை அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலு இருந்தார் ஆனால், மக்கள் ஆதரவு இல்லாததால் அவர் போட்டியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பளராக பிடென் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், துணை அதிபர் வேட்பளாராக கமலா ஹாரிஸ் முன்மொழியப்பட்டார். இதையடுத்தே அவர் அரசியல் வெளிச்சத்திற்கு வந்தார்.

தேர்தல் நெருங்கிவிட்டது

தேர்தல் நெருங்கிவிட்டது

நவம்பர் 3ம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் குடியரசுக்கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். துணை அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் போட்டிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் ஆளும் குடியரசு கட்சி தலைவர்கள், கமலா ஹாரிஸை கடுமையாக தாக்கி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அமெரிக்க பெண் நான்

அமெரிக்க பெண் நான்

அரிசோனாவில் நடந்த ஒரு இறுதி பிரச்சார கூட்டத்தில் கமலா ஹாரிஸ் பேசும்போது, ட்ரம்ப் நிர்வாகம் கொரோனா தொற்றுநோயை சரியாக கையாளவில்லை என்பதை பிரதானமாக பேசினார். தனிடையே கமலா ஹாரிஸ் சோசலிச அஜெண்டாவை முன்வைத்து செயல்படுவதாக கூறி ஆளும் குடியரசுக்கட்சி எம்பி பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அதை மறுத்துள்ள கமலா ஹாரிஸ், உங்களுக்கு தெரியும், என்னை பற்றி சிலர் தவறாக பேசுகிறாரகள். நான் உங்களுக்கு எல்லாம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறார்கள், நான் ஒரு பெருமை மிகுந்த தேசபக்தி கொண்ட அமெரிக்க பெண். நான் என் நாட்டை நேசிக்கிறேன், எங்கள் எண்ணங்கள் எல்லாம் அமெரிக்காவின் மதிப்புகளை பிரதிபலிக்கும்" என்றார்,

முககவசம் அணிகிறார்

முககவசம் அணிகிறார்

அரிசோனா பிரச்சாரத்தில் கமலா ஹாரிஸ், டிரம்பை போல், கூட்டமாக கூட்டி விமர்சனத்துக்கு ஆளாகவில்லை. தொண்டர்களை சமூக இடைவெளியை கடைபிடிக்க வைத்தார். அத்துடன் முககவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்தார். ஜோ பிடெனும் இதை பிரச்சாரக்கூட்டங்களில் தொடர்ந்து செய்து வருகிறார். இருவரின் பிரச்சாரமும் டிரம்ப், கொரோனாவை சரியாக கையாளவில்லை என்பதாகவே உள்ளது. அமெரிக்காவை டிரம்ப் பாழாக்கிவிட்டதாகவும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

யார் வெற்றி பெறுவார்கள்

யார் வெற்றி பெறுவார்கள்

ஆனால் டிரம்ப்போ ஜோ பிடெனை சீனாவின் ஆதரவாளர் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். கமலா ஹாரிஸையும் மோசமாக விமர்சித்து பேசி வருகிறார். ஆளும் மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நவம்பர் 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

English summary
The California Senator spoke out against charges from the Republicans that she is pressing a “socialist” agenda. Kamala Harris rejected the charges, she said I am a proud and patriotic American. love my country and our values reflect the values of American.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X