வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்பு விழா : அரசியல் தீவிரவாதம், வெள்ளை இனவாதம் முறியடிப்போம்-பைடன்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த, தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட கமலாதேவி ஹாரிஸ் பதவியேற்றனர்.

2020ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஆட்சியை பிடிக்க குறைந்தது 270 வாக்குகள் தேவை. பிடனுக்கு 306 வாக்குகளும், டிரம்பிற்கு 232 வாக்குகளும் கிடைத்தன. ஆனால் டிரம்ப் இதை ஏற்க மறுத்தார்.

ஜனவரி 20ம் தேதியான இன்று, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்

Newest First Oldest First
11:44 PM, 20 Jan

அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்ற வீடியோ
11:17 PM, 20 Jan

பதவி ஏற்பு விழா நிகழ்விடத்தில் இருந்து அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் புறப்பட்டனர்
11:03 PM, 20 Jan

அமெரிக்க ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் ஜோ பைடன்
10:57 PM, 20 Jan

ஜோ பைடன், கமலா ஹாரிஸுகு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து
10:53 PM, 20 Jan

அமெரிக்காவின் தேசிய இளம்கவிஞர் அமன்தா கோர்மன் கவிதை வாசித்தார்.
10:53 PM, 20 Jan

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ராகுல் காந்தி வாழ்த்து
10:47 PM, 20 Jan

ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து
10:45 PM, 20 Jan

அமெரிக்காவை, ஒவ்வொரு அமெரிக்கரையும் பாதுகாப்பேன் என உறுதிமொழி அளிக்கிறேன். கடவுள் இந்த தேசத்தை காப்பாற்றுவார்; கடவுள் நாட்டின் தடைகளை தகர்க்க துணை நிற்பார்- ஜோ பைடன்.
10:45 PM, 20 Jan

நமக்கான சவால்களை எப்படி எல்லாம் கடக்கப் போகிறோம் என்பதை உலகமே பார்த்து கொண்டிருக்கிறது- ஜோ பைடன்
10:45 PM, 20 Jan

நம் முன் உள்ள அத்தனை சவால்களையும் கடந்து நல்ல எதிர்காலத்தை உருவாக்குவோம்- ஜோ பைடன்
10:41 PM, 20 Jan

கொரோனாவால் உயிரிழந்த லட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்- ஜோ பைடன்
10:41 PM, 20 Jan

சேவையாற்ற தயாராகிவிட்டேன்- துணை அதிபர் கமலா ஹாரிஸ் முதல் ட்வீட்
10:40 PM, 20 Jan

அரசியல் வேறுபாடுகளை களைந்து ஒற்றை அமெரிக்கா தேசமாக ஒருங்கிணைந்து நிற்போம்- ஜோ பைடன்
10:39 PM, 20 Jan

அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய-அமெரிக்க இடையேயான உறவு மேலும் வலிமை பெறும் என மோடி நம்பிக்கை.
10:39 PM, 20 Jan

வேலைவாய்ப்பு உள்ளிட்ட அமெரிக்கர்களின் அச்சம் நீக்கப்படும். பொய்கள் வீழ்த்தப்பட்டு உண்மைகள் வெல்ல வேண்டும்- ஜோ பைடன்.
10:39 PM, 20 Jan

அமெரிக்கர்களிடையே மாற்று கருத்துகளால் பிளவுகள் ஏற்பட்டுவிடக் கூடாது- பைடன்
10:39 PM, 20 Jan

அனைத்து அமெரிக்கர்களுக்குமான அதிபராக நான் இருப்பேன் என உறுதி அளிக்கிறேன்- ஜோ பைடன்
10:39 PM, 20 Jan

வாக்குரிமைக்கு பெண்கள் போராடிய அமெரிக்காவில்தான் இப்போது முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளார்- பைடன்
10:33 PM, 20 Jan

அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
10:32 PM, 20 Jan

அமெரிக்காவின் ஆகப்பெரும் பலமே ஒற்றுமை- ஒற்றுமையால்தான் வளர்ச்சி சாத்தியம்- ஜோ பைடன்
10:32 PM, 20 Jan

நமது வரலாறு போராட்டங்கள், சவால்களை எதிர்கொண்டவை- பைடன் உலக யுத்தம், பொருளாதார சரிவு என அத்தனையில் இருந்தும் மீண்டிருக்கிறது அமெரிக்கா- பைடன்
10:29 PM, 20 Jan

அமெரிக்கர்களாகிய நாம் ஒன்றிணைந்து அனைத்து தீவிரவாதங்களையும் முறியடிக்க வேண்டும்- ஜோ பைடன்
10:29 PM, 20 Jan

100 ஆண்டுகளுக்குப் பின் கொரோனா எனும் பெருந்தொற்று அமெரிக்காவை தாக்கி உள்ளது - ஜோ பைடன். கொரோனா பெருந்தொற்றால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்- ஜோ பைடன். அமெரிக்காவில் அனைவருக்குமான சமமான நீதி என்பதை தாமதப்படுத்தமாட்டோம்- ஜோ பைடன். அரசியல் தீவிரவாதம், வெள்ளை இனவாதம் உள்ளிட்டவற்றை தூக்கி எறிய வேண்டிய தேவை உள்ளது.
10:29 PM, 20 Jan

ஜிம்மி கார்ட்டரின் வாழ்த்துகளைப் பெற்றேன் - ஜோ பைடன். ஜார்ஜ் வாஷிங்டன் ஏற்ற முதலாவது பிரமாணத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறேன் - ஜோ பைடன். அழகான ஐக்கிய அமெரிக்காவை நாட்டு மக்கள் விரும்புகின்றனர். நாம் பயணிக்க வேண்டிய தொலைவு, பணிகள், சீரமைப்புகள், சவால்கள் என நிறையவே இருக்கின்றன - ஜோ பைடன்.
10:27 PM, 20 Jan

அமெரிக்காவின் நாள் இது.. ஜனநாயகத்துக்கான நாள் இது. அமெரிக்கா பல சவால்களை கடந்து வந்துள்ளது. அமெரிக்காவில் ஆட்சி மாற்றங்கள் அமைதியாக நடந்தன.. ஆனால் சி நாட்களுக்கு முன்னர் வன்முறை இங்கு நிகழ்ந்தது.
10:24 PM, 20 Jan

அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்
10:22 PM, 20 Jan

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார்
10:19 PM, 20 Jan

பாடகி ஜெனிபர் லோபெஸ் This Land is Your Land எனற பாடலை பாடினார்.
10:16 PM, 20 Jan

கமலா ஹாரிஸ் பதவியேற்ற போது துளசேந்திரபுரம் கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
10:16 PM, 20 Jan

கமலா ஹாரிஸுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
READ MORE

US President Joe Biden Inauguration 2021 LIVE Updates in Tamil
English summary
US is looking forward to the inauguration day of President-elect Joe Biden and Vice-President-elect Kamala Harris, scheduled to take place on January 20. Here is the live updates in Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X