வாஷிங்டன்: அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த, தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட கமலாதேவி ஹாரிஸ் பதவியேற்றனர்.
2020ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஆட்சியை பிடிக்க குறைந்தது 270 வாக்குகள் தேவை. பிடனுக்கு 306 வாக்குகளும், டிரம்பிற்கு 232 வாக்குகளும் கிடைத்தன. ஆனால் டிரம்ப் இதை ஏற்க மறுத்தார்.
ஜனவரி 20ம் தேதியான இன்று, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்
அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்ற வீடியோ
11:17 PM, 20 Jan
பதவி ஏற்பு விழா நிகழ்விடத்தில் இருந்து அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் புறப்பட்டனர்
11:03 PM, 20 Jan
அமெரிக்க ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் ஜோ பைடன்
10:57 PM, 20 Jan
Congratulations to @JoeBiden on being sworn in as President of the United States and to @KamalaHarris on her historic inauguration. America’s leadership is vital on the issues that matter to us all, from climate change to COVID, and I look forward to working with President Biden.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ராகுல் காந்தி வாழ்த்து
10:47 PM, 20 Jan
Congratulations & best wishes to @JoeBiden and @KamalaHarris on being sworn in as the President & Vice President of USA. India-US ties are based on many shared values and I am sure that the partnership between the two nations will get further cemented in the coming years. pic.twitter.com/KkcqDLBTxF
ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து
10:45 PM, 20 Jan
அமெரிக்காவை, ஒவ்வொரு அமெரிக்கரையும் பாதுகாப்பேன் என உறுதிமொழி அளிக்கிறேன்.
கடவுள் இந்த தேசத்தை காப்பாற்றுவார்; கடவுள் நாட்டின் தடைகளை தகர்க்க துணை நிற்பார்- ஜோ பைடன்.
10:45 PM, 20 Jan
நமக்கான சவால்களை எப்படி எல்லாம் கடக்கப் போகிறோம் என்பதை உலகமே பார்த்து கொண்டிருக்கிறது- ஜோ பைடன்
10:45 PM, 20 Jan
நம் முன் உள்ள அத்தனை சவால்களையும் கடந்து நல்ல எதிர்காலத்தை உருவாக்குவோம்- ஜோ பைடன்
10:41 PM, 20 Jan
கொரோனாவால் உயிரிழந்த லட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்- ஜோ பைடன்
சேவையாற்ற தயாராகிவிட்டேன்- துணை அதிபர் கமலா ஹாரிஸ் முதல் ட்வீட்
10:40 PM, 20 Jan
அரசியல் வேறுபாடுகளை களைந்து ஒற்றை அமெரிக்கா தேசமாக ஒருங்கிணைந்து நிற்போம்- ஜோ பைடன்
10:39 PM, 20 Jan
அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய-அமெரிக்க இடையேயான உறவு மேலும் வலிமை பெறும் என மோடி நம்பிக்கை.
10:39 PM, 20 Jan
வேலைவாய்ப்பு உள்ளிட்ட அமெரிக்கர்களின் அச்சம் நீக்கப்படும்.
பொய்கள் வீழ்த்தப்பட்டு உண்மைகள் வெல்ல வேண்டும்- ஜோ பைடன்.
10:39 PM, 20 Jan
அமெரிக்கர்களிடையே மாற்று கருத்துகளால் பிளவுகள் ஏற்பட்டுவிடக் கூடாது- பைடன்
10:39 PM, 20 Jan
அனைத்து அமெரிக்கர்களுக்குமான அதிபராக நான் இருப்பேன் என உறுதி அளிக்கிறேன்- ஜோ பைடன்
10:39 PM, 20 Jan
வாக்குரிமைக்கு பெண்கள் போராடிய அமெரிக்காவில்தான் இப்போது முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளார்- பைடன்
10:33 PM, 20 Jan
My warmest congratulations to @JoeBiden on his assumption of office as President of the United States of America. I look forward to working with him to strengthen India-US strategic partnership.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
10:32 PM, 20 Jan
அமெரிக்காவின் ஆகப்பெரும் பலமே ஒற்றுமை- ஒற்றுமையால்தான் வளர்ச்சி சாத்தியம்- ஜோ பைடன்
10:32 PM, 20 Jan
நமது வரலாறு போராட்டங்கள், சவால்களை எதிர்கொண்டவை- பைடன்
உலக யுத்தம், பொருளாதார சரிவு என அத்தனையில் இருந்தும் மீண்டிருக்கிறது அமெரிக்கா- பைடன்
10:29 PM, 20 Jan
அமெரிக்கர்களாகிய நாம் ஒன்றிணைந்து அனைத்து தீவிரவாதங்களையும் முறியடிக்க வேண்டும்- ஜோ பைடன்
10:29 PM, 20 Jan
100 ஆண்டுகளுக்குப் பின் கொரோனா எனும் பெருந்தொற்று அமெரிக்காவை தாக்கி உள்ளது - ஜோ பைடன்.
கொரோனா பெருந்தொற்றால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்- ஜோ பைடன்.
அமெரிக்காவில் அனைவருக்குமான சமமான நீதி என்பதை தாமதப்படுத்தமாட்டோம்- ஜோ பைடன்.
அரசியல் தீவிரவாதம், வெள்ளை இனவாதம் உள்ளிட்டவற்றை தூக்கி எறிய வேண்டிய தேவை உள்ளது.
10:29 PM, 20 Jan
ஜிம்மி கார்ட்டரின் வாழ்த்துகளைப் பெற்றேன் - ஜோ பைடன்.
ஜார்ஜ் வாஷிங்டன் ஏற்ற முதலாவது பிரமாணத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறேன் - ஜோ பைடன்.
அழகான ஐக்கிய அமெரிக்காவை நாட்டு மக்கள் விரும்புகின்றனர்.
நாம் பயணிக்க வேண்டிய தொலைவு, பணிகள், சீரமைப்புகள், சவால்கள் என நிறையவே இருக்கின்றன - ஜோ பைடன்.
10:27 PM, 20 Jan
அமெரிக்காவின் நாள் இது.. ஜனநாயகத்துக்கான நாள் இது.
அமெரிக்கா பல சவால்களை கடந்து வந்துள்ளது.
அமெரிக்காவில் ஆட்சி மாற்றங்கள் அமைதியாக நடந்தன.. ஆனால் சி நாட்களுக்கு முன்னர் வன்முறை இங்கு நிகழ்ந்தது.
10:24 PM, 20 Jan
அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்
10:22 PM, 20 Jan
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார்
10:19 PM, 20 Jan
பாடகி ஜெனிபர் லோபெஸ் This Land is Your Land எனற பாடலை பாடினார்.
10:16 PM, 20 Jan
கமலா ஹாரிஸ் பதவியேற்ற போது துளசேந்திரபுரம் கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
10:16 PM, 20 Jan
கமலா ஹாரிஸுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
READ MORE
10:38 AM, 20 Jan
அதிபரின் பதவியேற்பு, வாஷிங்டன் நேரப்படி ஜனவரி 20ம் தேதி காலை 8.30 மணிக்கு துவங்கும்
10:38 AM, 20 Jan
இந்திய நேரப்படி, ஜனவரி 20ம் தேதி இரவு 10 மணிக்கு அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கும்
10:38 AM, 20 Jan
விழாவில் முக்கிய பிரமுகர்களாக லேடி காகா, ஜெனிபர் லோபஸ், ஜஸ்டின் டிம்பெர்லேக், டெமி லோவடோ, ஜான் லெஜண்ட், ஃபூ பைட்டர்ஸ் பங்கேற்பு
10:38 AM, 20 Jan
அதிபர் பதவியேற்பு விழாவில் தேசிய காவல்படையின் சுமார் 25,000 பேர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்
10:38 AM, 20 Jan
சுமார் 90 நிமிட நேரத்திற்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது
10:39 AM, 20 Jan
ஜோ பிடனின் வெப் பக்கத்திலும், பல்வேறு முன்னணி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் பதவியேற்பு நிகழ்வை பார்க்க முடியும்
10:39 AM, 20 Jan
அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஆசியாவைச் சேர்ந்தவரான கமலா ஹாரீஸ் துணை அதிபராக பதவியேற்க உள்ளார்.
6:52 PM, 20 Jan
வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் இருந்து குடும்பத்தினரோடு விடைபெற்றார் டிரம்ப்
ஜோ பிடன் மற்றும் கமலாஹாரிஸ் பதவியேற்பு விழாவில் டிரம்ப் கலந்துகொள்ளவில்லை.
அமெரிக்காவின் 100 ஆண்டு கால வரலாற்றில் டிரம்பை போல் முந்தைய அதிபர்கள் நடந்துகொண்டதில்லை.
6:57 PM, 20 Jan
இன்னும் சில மணி நேரங்களில் அமெரிக்காவின் புதிய அத்தியாயத்தை எழுத தொடங்குகிறார் ஜோ பிடன்.
ஜோ பிடன் பதவியேற்பு விழா குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிய ஒன் இந்தியா தமிழுடன் இணைந்திருங்கள்.
7:26 PM, 20 Jan
நான் மக்களுக்காக என்றும் போராடுவேன்; தொடர்ந்து கண்காணிப்பேன்; புதிய அரசின் நிர்வாகம் வெற்றிகரமாக இருக்க வாழ்த்துகிறேன் -டிரம்ப் உருக்கம்
7:27 PM, 20 Jan
ஊழியர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்த டிரம்ப், 9 மாதங்களில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி மருத்துவ பேரதிசியத்தை அமெரிக்கா நிகழ்த்தியதாக பெருமிதம்.
7:27 PM, 20 Jan
கடந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளை படைத்திருக்கிறோம் என விடைபெறும் நிகழ்வில் டிரம்ப் பேச்சு
7:45 PM, 20 Jan
டிரம்ப்பை வழியனுப்பும் நிகழ்வில் துணை அதிபர் மைக் பென்ஸ் கலந்துகொள்ளவில்லை.
ஜோபிடன், கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவில் மைக் பென்ஸ் பங்கேற்கிறார்.
8:00 PM, 20 Jan
குடியரசுக் கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் புஷ், ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர்கள் கிளிண்டன், ஒபாமா ஆகியோர் ஜோ பிடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு
அருமை நண்பர் ஜோ பிடனுக்கு வாழ்த்துகள்.. இது உங்கள் தருணம்- ஒபாமா வாழ்த்து
8:39 PM, 20 Jan
ஜோ பிடன் பதவியேற்பு விழாவிற்கு முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் வருகை தந்தார்
8:41 PM, 20 Jan
United States: Former President Barack Obama and former First Lady Michelle Obama arrive at the US Capitol for Joe Biden's inauguration. pic.twitter.com/xKaeGClKAo
United States: President-elect Joe Biden and his wife Jill Biden, and Vice President-elect Kamala Harris and her husband Doug Emhoff arrive at the US Capitol. https://t.co/BWPEC8UIgypic.twitter.com/ymJ6zpOqDo
பதவியேற்பு நிகழ்விடத்துக்கு ஜோ பைடன், கம்லா ஹாரிஸ் வருகை தந்தனர்- பிரார்த்தனையில் பங்கேற்பு
9:11 PM, 20 Jan
அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- அனைவரும் வெளியேற்றம் என சி.என்.என். தகவல்
9:13 PM, 20 Jan
துணை அதிபராகும் கமலா ஹாரிஸ் வளர்ப்பு தாயாக பாசம் காட்டிய ரெஜினா ஷெல்டன், அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி துர்குட் மார்ஷல் ஆகியோர் பயன்படுத்திய பைபிள்களை பயன்படுத்துகிறார்
US is looking forward to the inauguration day of President-elect Joe Biden and Vice-President-elect Kamala Harris, scheduled to take place on January 20. Here is the live updates in Tamil.