வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்

Google Oneindia Tamil News

பென்சில்வேனியா: அமெரிக்க அதிபர் தேர்தலில் பென்சில்வேனியாவில் பதிவான தபால் வாக்குகளை செல்லாதவை என அறிவிக்க கோரி டொனால்ட் டிரம்ப் பிரசார குழு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை அந்த மாகாண உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பிடன் (ஜோ பைடன்) வெற்றி பெற்றார். குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் தோல்வியைத் தழுவினார். ஆனாலும் டொனால்ட் டிரம்ப் தரப்பு தங்களது தோல்வியை ஏற்க மறுத்து வருகிறது.

US Presidential Election: Pennsylvania SC dismisses one more election case by Republicans

மேலும் ஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான பல வழக்குகளையும் நீதிமன்றங்களில் டிரம்ப் பிரசார குழுவினர் தாக்கல் செய்தனர். இதில் பெரும்பாலானவை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

இதேபோல் அமெரிக்க அதிபர் தேர்தலில் மிக முக்கியமான பங்கு வகித்த பென்சில்வேனியா மாகாணத்தில் பதிவான பல லட்சக்கணக்கான தபால் வாக்குகளை செல்லாது என அறிவிக்க கோரி அந்த மாகாண நீதிமன்றத்தில் டிரம்ப் பிரசார குழு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை நீதிபதி மேத்யூ பிரான் விசாரித்தார்.

நான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப் நான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்

அப்போது, தேர்தல் முறைகேடுகள் தொடர்பான இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என கூறி மனுவை டிஸ்மிஸ் செய்தார். இதற்கு எதிராக பென்சில்வேனியா உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து டிஸ்மிஸ் செய்தது.

English summary
The Pennsylvania supreme court dismissed one more election case by the Republicans in US Presidential Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X