வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் அமெரிக்க அதிபரானால் இந்திய தமிழ் வம்சாவளி கமலா ஹாரீஸ் துணை அதிபர் வேட்பாளர்: ஜோ பிடன் அதிரடி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் துணை அதிபர் வேட்பாளராக இந்திய தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸை நியமிப்பேன் என்று ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

Recommended Video

    Kamala Harris சென்னை பெண் America Vice President | Oneindia Tamil

    அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் டிரம்ப்பும் ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடனும் களத்தில் உள்ளனர்.

    US Presidential Elections: Joe Biden announces Kamala Harris to be his vice presidential Candidate

    இந்த அதிபர் தேர்தலில் தொடக்கத்தில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரீஸும் போட்டியில் இருந்தார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

    கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரால பதவி வகித்த கமலா ஹாரீஸ் 2016-ல் அம்மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கும் தேர்வானார். அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் எதிர்கால தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படுவர் கமலா ஹாரீஸ்.

    கமலா ஹாரீஸ், ஜோ பிடன் , பெர்னி சாண்டெர்ஸ் ஆகியோர்தான் ஜனநாயக கட்சியில் அதிபர் தேர்தல் வேட்பாளர்களாக போட்டியில் இருந்தனர். பின்னர் கமலா ஹாரீஸ், நிதி சிக்கலை முன்வைத்து போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பிடன் களத்தில் இருக்கிறார்.

    US Presidential Elections: Joe Biden announces Kamala Harris to be his vice presidential Candidate

    இந்த நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் ஜோ பிடன், தாம் அமெரிக்காவின் அதிபரானால் கமலா ஹாரீஸை துணை அதிபர் வேட்பாளராக நியமிப்பேன் என அதிரடியாக அறிவித்திருக்கிறார். இது அமெரிக்கா தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கமலா ஹாரீஸ் துணை அதிபரானால், இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, கறுப்பர் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல் முறையாக அமெரிக்காவின் துணை அதிபர் என்கிற சரித்திரம் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோ பிடனின் இந்த அறிவிப்பு கறுப்பர் இன மக்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    English summary
    In US Presidential Elections, Democratic presidential candidate Joe Biden has named Senator Kamala Harris as his his vice presidential Candidate.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X