வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபராக பதவியேற்கும் ஜோ பிடன் - எவ்வளவு சம்பளம் என்னென்ன சலுகைகள் தெரியுமா

அமெரிக்க அதிபராக பதவி வகிப்பவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்கா நாட்டின் 46வது அதிபராக ஜோ பிடன் இன்று பதவியேற்கப் போகிறார். அதிபர் பதவியில் இருக்கும்போது 4,00,000 டாலர் சம்பளம் பெறுகிறார் ஜோ பிடன். இதன் இந்திய மதிப்பு 29246000.00 ரூபாய் ஆகும். இந்த சம்பளத்துக்கு வரி விதிக்கப்படும். சம்பளம் தவிர அதிபருக்கு பொழுதுபோக்கு படியாக 19000 டாலர் வழங்கப்படும். வருடாந்திர செலவு படியாக 50,000 டாலரும், வரியில்லா பயண படியாக 100,000 டாலரும் வழங்கப்படுகிறது.

அமெரிக்கா அதிபராக பதவியேற்கப் போகும் ஜோ பிடன் விமானம் மூலம் தனது குடும்பத்தினருடன் வாஷிங்டனுக்கு புறப்பட்டுள்ளார். இன்னும் சில மணி நேரங்களில் அவர் அதிபராக பதவியேற்கப் போகிறார். இதனையொட்டி டெலாவரில் இருந்து கண்ணீர் மல்க விடை பெற்றுள்ளார் ஜோ பிடன்.

ஜே பிடன் 1972 ஆம் ஆண்டு அவரது 29 ஆவது வயதில் டெலாவரிலிருந்து அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 36 வருடங்கள் அந்த பதவியில் தொடர்ந்தார். 2009 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது துணை அதிபர் பதவி அந்தஸ்து வகித்தார். இப்போது ஜோ பிடன் அதிபராக பதவியேற்க உள்ளார்.

அதிபர் சம்பளம் இவ்வளவா?

அதிபர் சம்பளம் இவ்வளவா?

உலகிலேயே சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக கருதப்படும் அமெரிக்க அதிபர் பதவியால் சர்வதேச அளவில் அந்தஸ்து மட்டுமல்ல, ஏராளமான சலுகைகளும் கிடைக்கின்றன. அதிபர் பதவியில் இருக்கும்போது 4,00,000 டாலர் சம்பளம் பெறுகிறார் ஜோ பிடன். இதன் இந்திய மதிப்பு 29246000.00 ரூபாய் ஆகும். இந்த சம்பளத்துக்கு வரி விதிக்கப்படும்.

வரியில்லா பயணப்படி

வரியில்லா பயணப்படி

சம்பளம் தவிர அதிபருக்கு பொழுதுபோக்கு படியாக 19000 டாலர் வழங்கப்படும். வருடாந்திர செலவு படியாக 50,000 டாலரும், வரியில்லா பயண படியாக 100,000 டாலரும் வழங்கப்படுகிறது. அமெரிக்க அதிபருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்படும். அமெரிக்காவின் பழைமையான விசாரணை ஏஜன்சியான சீக்ரட் செர்வீஸ் அதிபருக்கும், அவரது குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிக்கிறது.

வெள்ளை மாளிகை வசதிகள்

வெள்ளை மாளிகை வசதிகள்

இன்று அதிபராக பதவியேற்ற உடன் ஜோ பிடன் ராணுவ மரியாதையுடன் வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். வெள்ளை மாளிகையில் வசிக்க வேண்டும் என்ற பிடனின் கனவு இன்று முதல் நனவாகப் போகிறது. அதிபர்கள் தங்கும் வெள்ளை மாளிகை 1800ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. ஆறு மாடிகளைக் கொண்ட 55,000 சதுர அடியில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

நீச்சல் குளம், தியேட்டர்

நீச்சல் குளம், தியேட்டர்

வெள்ளை மாளிகையில் 132 அறைகள், 35 கழிவறைகள் என சகல சவுகரியங்கள் உள்ளன. டென்னிஸ் கோர்ட், குடும்பத்துடன் சினிமா பார்க்க தியேட்டர், ஜாக்கிங் செல்ல ஓடுதளம், நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகளும் வெள்ளை மாளிகையில் உள்ளன.

அதிபரின் கார்

அதிபரின் கார்

அதிபரின் அதிகாரப்பூர்வ காரான தி பீஸ்ட் உலகின் மிக பாதுகாப்பான காராக கருதப்படுகிறது. இதன் கதவுகள் மிக பலமானவை. துப்பாக்கி தாக்குதல், ரசாயன தாக்குதல் ஆகியவற்றையும் சமாளிக்கக்கூடிய பலமான கார். இந்த காருக்குள் ஆக்சிஜன் சப்ளை செய்யும் கருவிகள், தீயணைப்பு கருவிகள், ரத்த வங்கி போன்றவை உள்ளன.

ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர்

அதிபர் பயணத் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஹெலிகாப்டர் மரைன் ஒன். இதில் ஏவுகணை தடுப்பு அம்சம் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன. இந்த ஹெலிகாப்டர் மீட்பு பணிகளுக்கும் உதவும். எஞ்சின் கோளாறு அடைந்தாலும் மணிக்கு 150 மைல் வேகத்தில் பறக்கும். இதில் அதிபர் பறக்கும்போது மரைன் ஒன் போலவே ஐந்து ஹெலிகாப்டர்கள் உடன் சேர்ந்து பறக்கும்.

ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தின் பாதுகாப்பு

ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தின் பாதுகாப்பு

அமெரிக்க அதிபரின் பயணத் தேவைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள விமானம் ஏர் ஃபோர்ஸ் ஒன். அதீத பாதுகாப்பு வசதிகளை கொண்டது. ஏதேனும் தாக்குதல் நடைபெற்றால் வானத்தில் பறந்துகொண்டே கமாண்ட் செய்வதற்கான வசதிகளும் இதில் உள்ளது. இந்த விமானத்தில் வானில் பறந்துகொண்டிருக்கும்போதே எரிபொருள் நிரப்ப முடியும்.

English summary
U.S. law states that the United States president has to be paid a salary while in office. In 2001, Congress raised the presidential salary from US dollar 200,000 to 400,000 US dollar and added an extra expense allowance of 50,000 US dollar a year. The president also receives a US dollar 100,000 nontaxable travel account and US dollar 19,000 for entertainment. The presidential salary is taxable, but the other added expenses are not.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X