வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் 6 மாகாணங்களில் 3-ல் ஜோபிடன் பிரகாசமான முன்னிலை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் விஸ்கான்சின் உள்ளிட்ட 6 மாகாணங்களில் 3-ல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பிரகாசமான முன்னிலையில் இருந்து வருகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னமும் மிஷிகன், விஸ்கான்சின், பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவாடா, அரிசோனா ஆகிய மாகாணங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

US Presidential Poll- Battleground states and Votes

இதில் விஸ்கான்சினில் ஜோ பிடன் ஏறத்தாழ வெற்றி பெற்றுவிட்டார். இம்மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடனுக்கு மொத்தம் 16,30,541 வாக்குகளும் குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு 16,10,007 வாக்குகளும் கிடைத்துள்ளன. இம்மாகாணத்தில் மொத்தம் எலக்டோரல் வாக்குகள் எண்ணிக்கை 10.

20 எலக்டோரல் வாக்குகளைக் கொண்ட பென்சில்வேனியாவில் இதுவரை ஜோபிடனுக்கு 32,62,869; டிரம்ப்-க்கு 32,85,445 வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

6 எலக்டோரல் வாக்குகளைக் கொண்ட நெவாடா மாகாணத்தில் ஜோபிடன் 6,04,251 வாக்குகளையும் டிரம்ப் 592,813 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

பென்சில்வேனியாவில் திருப்பம்.. டிரம்பை நெருங்கும் ஜோ பிடன்.. இங்கு வென்றால் போதும், அதிபர்தான்! பென்சில்வேனியாவில் திருப்பம்.. டிரம்பை நெருங்கும் ஜோ பிடன்.. இங்கு வென்றால் போதும், அதிபர்தான்!

16 எலக்டோரல் வாக்குகள் உள்ள மிஷிகனில் ஜோ பிடனுக்கு 27,95,714 வாக்குகளும் டொனால்ட் டிரம்ப்-க்கு 26,48,818 வாக்குகளும் கிடைத்துள்ளன.

16 எலக்டோரல் வாக்குகள் இருக்கும் ஜார்ஜியாவில் ஜோ பிடன் 2,446,211; டிரம்ப் 2,448,016 வாக்குகளை பெற்றிருக்கின்றனர்.

11 வாக்குகளைக் கொண்ட அரிசோனாவில் ஜோ பிடன் 15,32,062; டிரம்ப் 14,85,010 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

English summary
Here is Battleground states and Votes in US Presidential Poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X