வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயிச்சது யாரு "டிரம்ப்பா" இல்லாட்டி "பிடனா".. உடனே தெரியாது.. காத்திருக்கணும்!

அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது அன்று இரவே தெரிய வாய்ப்பில்லையாம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் உடனடியாக தெரிய வாய்ப்பில்லையாம். அதாவது தேர்தல் நடந்த நாளன்று இரவே முடிவு தெரிய வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள்.

அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில்யாருக்கு வெற்றி என்பது பெரும் விவாதமாகியுள்ளது. ஜோ பிடன் கையே தற்போதைக்கு ஓங்கியிருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் உடனடியாக தெரிய வராது என்று கூறப்படுகிறது. காரணம் இந்த முறை வாக்குச் சீட்டுகள் அதிக அளவில் பதிவாகியுள்ளன. எனவே அவற்றை எண்ணி முடிப்பதில் தாமதம் ஏற்படும் என்பதால் முடிவும் தாமதமாகும்.

ஹேக் செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப் வெப்சைட்.. ஹேக்கர்கள் என்ன எழுதி வச்சிட்டாங்க தெரியுமா? ஹையோ ஹையோ ஹேக் செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப் வெப்சைட்.. ஹேக்கர்கள் என்ன எழுதி வச்சிட்டாங்க தெரியுமா? ஹையோ ஹையோ

டிரம்ப்

டிரம்ப்

இதற்கு முன்பு பராக் ஒபாமா, 2008ல் வெற்றி பெற்றது, பின்னர் மீண்டும் 2012ம் ஆண்டு வெற்றி பெற்றது. அடுத்து 2016ல் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது ஆகியவையெல்லாம் தேர்தல் முடிந்தவுடனேயே முடிவு தெளிவாக தெரிந்து விட்டது... அப்போது வாக்கு சீட்டுகள் இந்த அளவுக்கு பெரிய அளவில் பதிவாகவில்லை. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வாக்குகளே அதிகம் என்பதால் முடிவும் தெளிவாக தெரிந்து விட்டது.

 அமெரிக்கா

அமெரிக்கா

இப்போது அப்படி இல்லை.. வாக்குச் சீட்டு வாக்குகள் அதிகம். அதை விட முக்கியமாக இந்தியாவில் உள்ளதைப் போல அமெரிக்காவில் கிடையாது.. தேர்தல் முடிந்ததுமே வாக்குகளை எண்ண ஆரம்பிப்பார்கள். இந்தியாவில் தேர்தல் நாளுக்கும், வாக்கு எண்ணிக்கை நாளுக்கும் இடையே போதிய இடைவெளி இருக்கும். எனவே வாக்குகளை எண்ணும் பணி எளிதாக இருக்கும்.

 தபால் வாக்கு

தபால் வாக்கு

ஆனால் அமெரிக்காவில் அப்படி கிடையாது. தேர்தல் முடிந்ததுமே வாக்குகளை எண்ண ஆரம்பித்து விடுவார்கள்.. வழக்கமாக சில மணி நேரங்களில் டிரெண்டிங் தெரிய ஆரம்பித்து விடும். அல்லது அடுத்த நாள் காலையில் முடிவு ஓரளவுக்குத் தெரிந்து விடும்.. இந்த முறை அப்படி தெரிய வாய்ப்பில்லை...இந்த முறைய நிறையப் பேர் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி தபால் வாக்குகளை குவித்து வருகின்றனர்.

 தாமதமாகும்

தாமதமாகும்

எனவே தேர்தல் நாளான நவம்பர் 3ம் தேதி நேரில் வந்து வாக்களிப்போர் குறைவாகவே இருப்பார்கள.தபால் வாக்குகள்தான் அதிகம் பதிவாகி வருகின்றன... எனவே வாக்குகளை எண்ணி முடிப்பதற்குள் விடிந்து விடும் என்பதால் முடிவு தெரியவும் தாமதமாகும்... அக்டோபர் 29ம் தேதி நிலவரப்படி, மொத்தம் 70.6 லட்சம் பேர் நேரில் வந்தும், தபால் மூலமும் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

 தேர்தல் முடிவு

தேர்தல் முடிவு

அதில் கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கும் மேற்பட்டவை தபால் வாக்குகள் ஆகும்... இன்னும் 40.1 லட்சம் பேர் வாக்களிக்க வேண்டியுள்ளது... இவர்கள் அடுத்த சில நாட்களில் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. புளோரிடா, நெவாடா, மிச்சிகன் உள்ளிட்ட மாகாணங்களில் அதிக அளவிலான தபால் வாக்குகள் இன்னும் போடப்படாமல் உள்ளதாம். அவையும் நவம்பர் 3ம் தேதிக்குள் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
US Presidential Polls 2020: Why we're unlikely to know the winner on election night
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X