வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்க ரெடி.. ஒரே ஒரு சிக்கல்தான்.. அமெரிக்கா சொல்கிறது

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியாவிற்கு ஆயுத சப்ளை செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. ஆனால் ரஷ்யாவிடம் இந்தியா பெறும் ஆயுத சப்ளை அதற்கு இடையூறாக உள்ளது என்று, மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி (தெற்கு மற்றும் மத்திய ஆசியா விவகாரங்கள்) அலிஸ் ஜி வெல்ஸ், தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் அதி நவீன ஏவுகணை சிஸ்டம் எஸ்-400 ஆகும். இதை 5 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்க, இந்தியா கடந்த அக்டோபரில் கையெழுத்திட்டது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையே நடைபெற்ற விரிவான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்தியாவும் ரஷ்யாவும் இந்த பாதுகாப்பு அமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

பதில் சொல்ற அளவுக்கு வொர்த்தான ஆள் கிடையாது 'டிரம்ப்'.. ஜப்பான் பிரதமரிடம் சொன்ன ஈரான் தலைவர் பதில் சொல்ற அளவுக்கு வொர்த்தான ஆள் கிடையாது 'டிரம்ப்'.. ஜப்பான் பிரதமரிடம் சொன்ன ஈரான் தலைவர்

புது விவகாரம்

புது விவகாரம்

ஆனால், இது இந்தியா-அமெரிக்கா நடுவேயான பாதுகாப்பு உறவில் சிக்கலை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா அப்போதே கூறியிருந்தது. இந்த நிலையில்தான், அலிஸ் ஜி வெல்ஸ் இப்போது புது பிரச்சினையை கிளப்பியுள்ளார்.

இந்தியாவுடன் உறவு

இந்தியாவுடன் உறவு

இப்போது போல 10 வருடங்கள் முன்பாக இந்தியாவுக்கு அதிக ஆயுதங்களை வழங்க அமெரிக்கா தயாராக இருந்தது இல்லை. இப்போது, இந்தியாவுடன் பாதுகாப்பு விஷயங்களில் மிகவும் நெருங்கி வருகிறோம். வேறு எந்த நாட்டை விடவும், இந்தியாவுடன்தான் அதிகப்படியான, ராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

அமெரிக்கா

அமெரிக்கா

எஸ்-400 ஏவுகணை சிஸ்டத்தை இந்தியா வாங்குவது தொடர்பாக உண்மையிலேயே அமெரிக்காவுக்கு கவலை இருக்கிறது. இந்தியாவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நாங்கள் இந்தியாவுடன், ராணுவ தளவாட வர்த்தகத்தை அதிகரிக்கவே விரும்புகிறோம். ஆனால். 65-70 சதவீதம் ராணுவ ஹார்ட்வேர்கள், ரஷ்யாவுடையதாகவே இருக்கின்றன.

இந்திய பொருட்கள்

இந்திய பொருட்கள்

ஈரானிடமிருந்து கச்சா எண்ணை வாங்கக் கூடாது என்று அமெரிக்க இந்தியாவை நெருக்கடி செய்ததால், இந்தியா, சீனாவுடன் நெருங்குவதாக நாங்கள் நினைக்கவில்லை. இந்தியாவின் பெரிய மார்க்கெட்டாக அமெரிக்கா உள்ளது. இந்திய பொருட்கள்தான் சுமார் 20 சதவீதம் அங்கு விற்பனையாகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
The US is ready to help India's defence needs with the latest technologies and equipment, but New Delhi purchasing long-range S-400 missile defence system from Russia would limit cooperation, the Trump administration has cautioned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X