வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் ஓயாத கொரோனா சுனாமி- 24 மணிநேரத்தில் 1,80,061 பேருக்கு கொரோனா; 2,604 பேர் மரணம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,80,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,41,72,770. உலகின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 14,85,717.

US Records new coronavirus infections 1,80,061 in 24 hours

உலக நாடுகளில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,44,25,013. உலக நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் ஒருநாள் கொரோனா பாதிப்பு சுனாமி பேரலையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,80,061 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,604 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,41,06,379 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 2,76,969 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்ததாக கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. 3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 52,248 ஆக இருந்தது. பிரேசிலில் ஒரே நாளில் 697 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

நாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் இன்றைய தினம் கொரோனா பாதிப்பு தெரியுமா? நாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் இன்றைய தினம் கொரோனா பாதிப்பு தெரியுமா?

ரஷ்யாவில் 24 மணிநேரத்தில் 26,402 பேருக்கு கொரோனா உறுதியானது. ரஷ்யாவில் 24 மணிநேரத்தில் மொத்தம் 569 பேர் மரணித்துள்ளனர். மேலும் இத்தாலியில் 785 பேர் 24 மணிநேரத்தில் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர்.

English summary
US Records new coronavirus infections 1,80,061 in 24 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X