வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் சொர்க்க பூமி,.. அமெரிக்கா ரிப்போர்ட்.. ஐநா கொடுத்த ரியாக்சன்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான சொர்க்கபூமியாக இருப்பதாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்க பதில் அளித்த ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில். ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் கீழ் அனைத்து உறுப்பு நாடுகளும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றார்.

தீவிரிவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் இருப்பதாக அமெரிக்கா வருடாந்திர 2019 பயங்கரவாதம் குறித்த அறிக்கையில் கூறியுள்ளது. அந்த அறிக்கையில். "பிப்ரவரி மாதம் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாத நிதியுதவிகளை எதிர்ப்பதற்கும், இந்தியாவிற்கு எதிராக திவிரவாதிகள் குழுக்கள் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்துவதைத் தடுப்பதற்கும் 2019 ல் பாகிஸ்தான் "சுமாரான நடவடிக்கைகளை" மேற்கொண்டது. எனினும் பிராந்திய ரீதியாக மையமாக செயல்படும் பிற தீவிரவாத குழுக்களுக்கு "பாதுகாப்பான துறைமுகமாக" பாகிஸ்தான் இருந்து வருகிறது.

லஷ்கர் இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் உட்பட வெளிப்புறமாக கவனம் செலுத்திய சில தீவிரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தது, ஆனால் ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனர் மற்றும் ஐ.நா.வால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பபட்ட மசூத் அசார் மற்றும் 2008 மும்பை தாக்குதலுக்கு திட்டமிட்ட சஜித் மிர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை . அவர்கள் இருவரும் பாகிஸ்தானில் சுதந்திரமாக இருப்பதாக நம்பப்படுகிறது.

என் முன்னாடியே என் முன்னாடியே "மட்டன்".. காதல் தம்பதிக்குள் வந்த சண்டை.. ஆளுக்கு ஒரு ரூமில் விஷம் குடித்து.. கொடுமை

ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா

ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா

எனினும் ஆப்கானிஸ்தானில் சமாதான முன்னெடுப்புகளுக்கு பாகிஸ்தான் சில சாதகமான பங்களிப்புகளை செய்திருக்கிறது., ஆனால் 2019 ஆம் ஆண்டில் அனைத்து செயல் திட்டங்களையும் அது உருப்படியாக நிறைவேற்றவில்லை. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உள்ள அல்-கொய்தா அமைப்பு அழிக்கபட்டு இருந்தாலும் அந்த அமைப்பின் உலகளாவிய தலைமையின் முக்கிய நபர்களும், இந்திய துணைக் கண்டத்தில் (AQIS) அதன் பிராந்திய இணை அல்-கொய்தாவும் வரலாற்று ரீதியாக சேவை செய்த பிராந்தியத்தின் தொலைதூர இடங்களிலிருந்து தொடர்ந்து செயல்பட்டு வந்தன. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சொர்க்க பூமியாக உள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா

லஷ்கர்-இ-தொய்பா

தீவிரவாதிகளுக்கான பாதுகாப்பான புகலிட பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் தேசிய செயல் திட்டம் "நாட்டில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை" என்று கூறினாலும், நாட்டிற்கு வெளியே தாக்குதல்களில் கவனம் செலுத்தும் பல தீவிரவாத குழுக்கள் 2019 ல் பாகிஸ்தான் மண்ணிலிருந்து தொடர்ந்து செயல்பட்டு வந்தன, இதில் ஹக்கானி நெட்வொர்க், லஷ்கர்-இ-தொய்பா, மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகியவை முக்கியமானது.சில பயங்கரவாத குழுக்கள் மற்றும் தனிநபர்கள் நாட்டில் வெளிப்படையாக செயல்படுவதைத் தடுக்க அதிகாரிகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை.

அமெரிக்கா நிதி நிறுத்தம்

அமெரிக்கா நிதி நிறுத்தம்

பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் தீவிரவாத குழுக்கள் முன்வைக்கும் அச்சுறுத்தலை அரசாங்கம் போதுமான அளவில் எதிர்கொள்ளத் தவறியதால், 2018 ஜனவரியில், பாகிஸ்தானுக்கு அதன் பாதுகாப்பு உதவிகளை நிறுத்திய அமெரிக்க அரசு, 2019ம் ஆண்டு முழுவதும் நிதியுதவிகளை நிறுத்தியது" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Recommended Video

    50% பணியாளர்களை உடனே திரும்ப பெறுங்கள்! Pakistan-க்கு India உத்தரவு
    ஐநா கண்டிப்பு

    ஐநா கண்டிப்பு

    இதனிடையே "சம்பந்தப்பட்ட பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் கீழ் அனைத்து உறுப்பு நாடுகளும் தங்கள் கடமைகளுக்கு "கட்டுப்பட வேண்டும்" என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எதிர்பார்க்கிறார், என அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஒரு கேள்விக்கு பதிலளித்த ஸ்டீபன் டுஜாரிக், அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து அவர் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டார், "வெளிப்படையாக, கொள்கை அடிப்படையில், அனைத்து உறுப்பு நாடுகளும் தங்கள் கடமைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

    English summary
    UN Secretary-General Antonio Guterres expects all member states to "live up" to their obligations under the relevant Security Council resolutions, his spokesperson has said, after a US report noted that Pakistan remains a safe haven for terrorists as it did not take actions against JeM founder Masood Azhar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X