வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனாவுக்கு திரும்பும் பக்கம் எல்லாம் செக் வைக்கும் அமெரிக்கா.. 24 சீன நிறுவனங்ளுக்கு அதிரடி தடை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் செயற்கைத் தீவுகளை உருவாக்குவதில் பங்கெடுத்ததற்காக 24 சீன நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பொருளாதாரத் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

தென்சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதிளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் அண்டை நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா சீனாவின் செயல்களை ஆரம்பம் முதலே கண்டித்து வருகிறது.

இந்நிலையில் தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் செயற்கைத் தீவுகளை உருவாக்குவதில் 24 சீன நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. அந்த நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

நைஸாக சீனாவுக்குள் அத்துமீறி நுழைந்த.. 2 அமெரிக்க விமானங்கள்.. பீஜிங்கில் பதட்டம்!நைஸாக சீனாவுக்குள் அத்துமீறி நுழைந்த.. 2 அமெரிக்க விமானங்கள்.. பீஜிங்கில் பதட்டம்!

தடை விதிப்பு

தடை விதிப்பு

தடை விதிக்கப்பட்ட 24 அரசு நிறுவனங்களில் கட்டுமான நிறுவனமான சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கோ நிறுவனத்தின் துணை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் சீனா கப்பல் கட்டும் குழுவின் ஒரு பிரிவு ஆகியவையும் அடங்கும்.

பல நாடுகளின் இறையாண்மை

பல நாடுகளின் இறையாண்மை

பல நாடுகள் உரிமை கோரும் தென் சீனக் கடலின் பகுதிகளில் சீன இராணுவம் செயற்கை தீவை உருவாக்குவதற்கு எதிராக அழுத்தம் கொடுப்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளது. தடை விதிக்கப்பட்ட 24 நிறுவனங்களும் "தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய ராணுவ முகாம்களை உருவாக்கவும் இராணுவமயமாக்கவும் சீனாவுக்கு உதவியது" என்று அமெரிக்க வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா புகார்

அமெரிக்கா புகார்

"2013 ஆம் ஆண்டு முதல், சீன மக்கள் குடியரசு த அரசுக்கு சொந்தமான நிறுவனங்களைப் பயன்படுத்தி தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய அம்சங்களில் 3,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை அகழ்வாராய்ச்சி மற்றும் மீட்டெடுக்கவும், பிராந்தியத்தை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தவும், அண்டை நாடுகளின் இறையாண்மையை காலில் போட்டு மிதித்து‘விட்டு சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்துகிறது "என்று வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி செய்ய முடியாது

ஏற்றுமதி செய்ய முடியாது

24 நிறுவனங்கள் வர்த்தகத் துறையின் "நிறுவன பட்டியலில்" வைக்கப்பட்டன, அமெரிக்க அரசின் உத்தரவால் அந்நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வது தடுக்கப்பபட்டுள்ளது. தென் சீனக் கடல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அந்நிறுவனங்களின் அதிகாரிகள் அமெரிக்காவிற்கு வருகை தர விசா பெற முடியாது என்று பாம்பியோ தனது அறிக்கையில் கூறினார்.அந்த நிறுவனங்களில் பணியாற்றும் தனிநபர்களின் பெயர்கள் வெளியிடப்படவிலலை.

English summary
The United States sanctions and restrictions on two dozen Chinese companies and associated officials for taking part in building artificial islands in disputed waters in the South China Sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X