வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிரம்ப்-ன் குடியேறிகளை நாடு கடத்தும் திட்டத்துக்கு எதிராக யு.எஸ். சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்பின் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் திட்டத்துக்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இது டிரம்ப்-க்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் ஒபாமா ஆட்சிக் காலத்தில் Dreamers Act கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் கல்வி, வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

US SC rules against Trump in DACA case

ஆனால் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் 2017-ல் இந்த சட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார். சட்டவிரோதமாக குடியேறியதாக 6,50,000 பேரை நாடு கடத்தும் திட்டத்தை செயல்படுத்துவதில் முனைப்புடன் இருந்தார்.

அதிபர் டிரம்ப்பின் இந்த திட்டம் தொடர்பாக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவை கொடிய ஆட்கொல்லி நோய் கொரோனா கொடூரமாக தாக்கி அழித்து வருகிறது.

சீனாவை தண்டிக்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்து.. உய்குர் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைக்காக அதிரடிசீனாவை தண்டிக்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்து.. உய்குர் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைக்காக அதிரடி

Recommended Video

    US Election-ல் ஜெயிக்க China அதிபரிடம் பேரம் பேசிய Trump

    இக்கொள்ளை நோய் தடுப்பு பணியில் பல்லாயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் எதிர்காலத்தை பற்றிய எந்த கவலையுமே இல்லாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு எதிரானதாகவும் இருக்கலாம் என்ற அச்சமும் அவர்களிடையே இருந்தது.

    இந்நிலையில்தான் டிரம்ப்பின் திட்டத்துக்கு எதிராக அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. டிரம்ப்பின் திட்டத்தை கடுமையாகவும் உச்சநீதிமன்றம் விமர்சித்திருக்கிறது. இதனால் அமெரிக்காவில் கல்வி , வேலை வாய்ப்பு பெற்ற சட்டவிரோத குடியேறிகளின் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பும் நிம்மதியும் கிடைத்திருக்கிறது.

    English summary
    US Supreme Court dealt US President Donald Trump a major setback on his hardline immigration policies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X