• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கொரோனா வைரஸ்க்கு எதிராக முக்கிய திருப்புமுனை.. 3டி அணு வரைபடம்.. விஞ்ஞானிகள் சூப்பர் அறிவிப்பு!

|
  Coronavirus:A candidate vaccine is ready for pre-clinical trials|கொரோனாவுக்கு எதிராக சோதனை தடுப்பூசி

  வாஷிங்டன்: மனித உயிர் அணுக்களை கொரோனா வைரஸ் எப்படி பாதிக்கிறது என்பது குறித்து முதல் 3 டி அணு வரைபடத்தை உருவாக்கியதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்., இது கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் வளர்ப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும்.

  கோவிட் -19 என்ற உலக சுதாதார நிறுவனத்தால் பெயரிட்டு அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோய் போல் எல்லோருக்கும் பரவி வருகிறது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த வைரஸ் தாக்கி இதுவரை 2000 பேருக்கு மேல் இறந்துவிட்டனர். 74185 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  சீனாவில் இருந்து ஜப்பான், சிங்கப்பூர், பிரிட்டன், துபாய், இந்தியா, ஐரோப்பா உள்பட 20 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதுவரை சீனாவை தவிர இதரநாடுகளில் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

  நோய் எதிர்ப்பு சக்தி

  நோய் எதிர்ப்பு சக்தி

  மனித உயிர்களை கொன்றுவரும் உயிர்கொல்லி வைரஸான கொரோனாவிற்கு(கோவிட்-19) தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக இறங்கி உள்ளது. தற்போதைய நிலையில், ஹெச்ஐவி பாதித்தவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்து மற்றும் வைரஸ் நோய்களுக்கு பொதுவாக கொடுக்கப்படும் சில மருந்துகளின் கலவையை நோயாளிகளுக்கு கொடுத்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களை இந்த நோய் மோசமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதேநேரம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை பலி கொண்டுவிடுகிறது.

  அமெரிக்கா ஆய்வு

  அமெரிக்கா ஆய்வு

  இந்நிலையில் அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய சுகாதார நிறுவனம் (என்ஐஎச்) ஆகியவற்றின் குழு முதலில் சீன ஆராய்ச்சியாளர்களால் பகிரங்கமாக கிடைக்கப்பெற்ற வைரஸின் மரபணு குறியீட்டை ஆய்வு செய்தது, மேலும் ஸ்பைக் புரதம் எனப்படும் ஒரு முக்கிய பகுதியின் உறுதிப்படுத்தப்பட்ட மாதிரியை உருவாக்க இதைப் பயன்படுத்தியது.

  3டி வரைபடம்

  3டி வரைபடம்

  பின்னர் அவர்கள் கிரையோஜெனிக் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்பைக் புரதத்தை 3டியில் படம்பிடித்து, தங்கள் கண்டுபிடிப்புகளை அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளனர். இது கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் வளர்ப்பதற்கான ஒரு முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.

  மனிதர்களுக்கு

  மனிதர்களுக்கு

  இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய ஆஸ்டின் விஞ்ஞானி ஜேசன் மெக்கலைன் கூறுகையில், "இந்த ஸ்பைக் உண்மையில் ஆன்டிஜெனாகும், இதற்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கவும் மனிதர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறோம். இதன் மூலம் மனிதர்கள் உண்மையான வைரஸை எதிர்கொள்ளும் போது, நோய் எதிர்ப்பு அமைப்புகள் அதை தாக்க தயாராக இருக்கும்.

  நீண்ட ஆய்வு

  நீண்ட ஆய்வு

  நானும் என்னுடன் உள்ள சக விஞ்ஞானிகளும் ஏற்கனவே SARS மற்றும் MERS உள்ளிட்ட கொரோனா வைரஸ் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைப் படிப்பதற்காக பல ஆண்டுகள் செலவிட்டோம். இது ஸ்பைக் புரதத்தை சீராக வைத்திருக்க தேவையான பொறியியல் முறைகளை உருவாக்க உதவியது" என்றார். இந்த விஞ்ஞானிகள் குழு உருவாக்கிய ஸ்பைக் புரதம் தானாகவே NIH (அமெரிக்காவின்) ஆல் தடுப்பூசியாக சோதிக்கப்படுகிறது. தற்போது இந்த குழு அதன் மூலக்கூறு கட்டமைப்பின் வரைபடத்தை உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளுக்கு அனுப்புகிறது, எனவே அவர்கள் அதை பார்த்து ஆராய்வதன் மூலம் இன்னும் சிறப்பான தடுப்பு மருந்தாக அதை மேம்படுத்த முடியும்.

  கொரோனாவை தடுக்கும்

  கொரோனாவை தடுக்கும்

  ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க, ஸ்பைக்கின் வெவ்வேறு பகுதிகளுடன் பிணைக்கவும் மற்றும் கொரோனாவின் செயல்படுவதைத் தடுக்கவும் புதிய புரதங்களை உருவாக்கவும் விஞ்ஞானிகளுக்கு இந்த மாதிரி உதவும். இவை ஆன்டிவைரல்கள் என்று அழைக்கப்படுகின்றன..

  எப்படி தாக்குகிறது

  எப்படி தாக்குகிறது

  டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழக-டெக்சர்கானாவின் வைராலஜிஸ்ட் பெஞ்சமின் நியூமன் இதுபற்றி கூறுகையில், "இது மிக முக்கியமானது, கொரோனா வைரஸ் புரதங்களின் அழகிய தெளிவான கட்டமைப்பாகும் - இந்த கொரோனா வைரஸ் எவ்வாறு உயிரணுக்களைக் கண்டுபிடித்து நுழைகிறது என்பதைப் புரிந்துகொள்வதில் ஒரு உண்மையான திருப்புமுனை, ஸ்பைக் மூன்று ஒத்த புரதங்களால் ஆனது என்றாலும், ஒன்று மற்றொன்றுக்கு மேலே நெகிழ்கிறது, இது வைரஸ் குறிற்த நீண்ட ஆராய்வதற்கு உதவும்:" என்று கூறினார்.

   
   
   
  English summary
  'Breakthrough' : US scientists created the first 3D atomic scale map of the part of the novel coronavirus
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X