வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒற்றர்களின் கூடாரமான சீன தூதரகம்.... பூட்டானில் மூக்கை நுழைக்கும் சீனா... மைக் பாம்பியோ விளாசல்!!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பூட்டான் நிலத்தை கோருவதன் மூலம் இந்தியாவில் ஊடுருவ உள்நோக்கத்துடன் சீனா செயல்பட்டு வருகிறது. ஹூஸ்டனில் இருக்கும் சீனா தூதரகம் ஒற்றர்களின் கூடாரமாக இருந்தது. ஆதலால் அதை மூடினோம்'' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Chinese consulate is a den of spies, says Mike Pompeo

    இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்த சில மாதங்களாக மோதல் வெடித்து வருகிறது. எல்லையில் இந்தியாவுக்கு சொந்தமான கிழக்கு லடாக்கில் ஆக்ரமிப்பு செய்து இருக்கும் சீனா, தொடர்ந்து இந்தியாவுக்கு இடைஞ்சல் கொடுத்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த போரில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

    மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில் சீனாவுக்கு தொடர்பு? ஷாக் தகவல் மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில் சீனாவுக்கு தொடர்பு? ஷாக் தகவல்

    சீனாவின் அத்துமீறல்

    சீனாவின் அத்துமீறல்

    தற்போது சீனாவின் கவனம் பூட்டான் பக்கம் திரும்பியுள்ளது. பூட்டானில் இருக்கும் சாக்டெங் விலங்குகள் சரணாலயத்திற்கு சீனாவிடம் பூட்டான் நிதியுதவி கோரி இருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கும் சீனா, அந்த விலங்குகள் சரணாலயம் தங்களுக்கு சொந்தமானது என்ற அதிர்ச்சி தகவலையும் கொடுத்துள்ளது.

    சீனாவின் அதிகாரம்

    சீனாவின் அதிகாரம்

    இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை விவகார கமிட்டி கூட்டத்தில் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பேசுகையில், ''கடந்த 1989 ஆம் ஆண்டில் சீன அதிபராக ஜி ஜின்பிங் பதவியேற்றதில் இருந்து கடந்த பல ஆண்டுகளாக ஒரே மாதிரியான சீரான நடவடிக்ககைகளை எடுத்து உலக நாடுகளுக்கு காட்டி வருகிறார். அதிகாரத்தையும், ஆளுமையையும் மற்றவர்கள் மீது விரிவாக்க சீனா விரும்புகிறது.

    இந்தியாவுக்குள் நுழைய திட்டம்

    இந்தியாவுக்குள் நுழைய திட்டம்

    சீனர்களின் சோசியலத்தை உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கின்றனர். தற்போது பூட்டானின் நிலப்பகுதியை உரிமை கோருகின்றனர். இதன்மூலம் இந்தியாவுக்குள் கால் பதிக்க உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகின்றனர். அவர்களது மிரட்டல்களை, கொடுமைகளை நாம் எதிர்ப்போமா அல்லது பணிந்து போவோமா என்று ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக இது துவங்கிவிட்டது. அவர்களுக்கு எதிராக இன்னும் நாம் நிறைய வேலை செய்ய வேண்டியது இருக்கிறது. மிகவும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஜப்பான் கண்டிப்பு

    ஜப்பான் கண்டிப்பு

    சீனாவின் 110 ஆப்களை இந்தியா தடை செய்துள்ளது. ஆசியாவில் இருக்கும் பத்து நாடுகள் தென் சீன கடல் பிரச்னையை சர்வதேச சட்டத்திற்கு உள்பட்டு தீர்வு காண வேண்டும் என்று கூறி வருகின்றன. ஹாங்காங்கில் சீனாவின் சட்ட ரீதியிலான அத்துமீறலை ஜப்பானும் கண்டித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளும் கண்டித்துள்ளன.

    அறிவுசார் சொத்து மிரட்டல்

    அறிவுசார் சொத்து மிரட்டல்

    சீனாவின் அறிவுசார் சொத்து ரீதியிலான மிரட்டல்களை எதிர்கொள்ள அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து பணியாற்றி வருகின்றன. இந்த நாடுகளின் பிரதிநிதிகள இணைந்து பணியாற்றி வருவதை பாராட்டுகிறேன்.

    ஹாங்காங்

    ஹாங்காங்

    சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். இவர்களை சீன நிறுவனங்களில் அடிமைகளாக பயன்படுத்தி வருகின்றனர். இதை அமெரிக்கா கடுமையாக கண்டித்துள்ளது'' என்றார்.

    English summary
    US Secretary of State Mike Pompeo says Chinese consulate in Houston is a den of spies
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X