வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கையுறை அணிந்து கொண்டு.. கால் மீது கால் போட்டு.. யார் இவர்? ஏன் உலகம் முழுக்க மீம் வைரலாகிறது?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: "கையில் குளிருக்கு அணியக்கூடிய கையுறை.. முகத்தில் முகக் கவசம்.. உடலுக்கு மேலே ஜெர்கின் வகை ஆடை.. கால் மீது கால் போட்டபடி உட்கார்ந்திருக்கும் ஒரு முதியவர்.." இந்த புகைப்படம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பயங்கர வேகத்தில் சுற்றி வருகிறது.

தமிழகம் மட்டும் கிடையாது, இந்தியா மட்டும் கிடையாது, உலகம் முழுக்கவே இவரது படம் மீம் உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டு தீயாக சுற்றி வருகிறது.

சிலருக்கு இவர் யார் என்று தெரிந்திருக்கும்.. சிலருக்கு இவர் யார்? எதற்காக இந்த புகைப்படம் சுற்றி வருகிறது என்பது தெரிந்திருக்காது.

விதவிதமான அலங்காரம்

விதவிதமான அலங்காரம்

விஷயம் இதுதான்.. கடந்த 20ம் தேதி அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். பதவி ஏற்பு விழாவுக்கு பல விஐபிகள், செனட் உறுப்பினர்கள் வந்திருந்தனர். அதில் ஒருவர் தான் சீனியர் செனட் உறுப்பினர், பெர்னி சேன்டர்ஸ். பதவியேற்ற விவிஐபிகள் முதல், பார்க்க வருகை தந்த விஐபிகள் வரை ஒவ்வொருவரும் விதவிதமான அலங்காரத்துடன் வந்திருந்தனர்.

சாதாரணமாக வந்தார்

சாதாரணமாக வந்தார்

வருகை தந்த விஐபிகள் தங்களது ஆடை, அலங்காரங்களில் மிகுந்த அக்கறை காட்டி இருந்தனர். உலகம் முழுக்க சுற்றி கவனிக்கப்படும் ஒரு நிகழ்ச்சி என்பதால் அவர்கள் மிகுந்த சிரத்தை எடுத்து இருந்தனர். ஆனால், பெர்னி சேன்டர்ஸ் ரொம்ப இயல்பாக வந்திருந்தார். சாதாரணமாக குளிருக்கு அணியக்கூடிய ஒரு கையுறையை அணிந்திருந்தார். சாதாரண ஜாக்கெட் அணிந்து கால் மீது கால் போட்டபடி மிகவும் இயல்பாக இருந்தார்.

மீம்ஸ்

மீம்ஸ்

அத்தனை கூட்டத்திலும் மிக மிக இயல்பாக தெரிந்தது இவர்தான். எனவே தான் இவரை வைத்து மீம் உருவாக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க மீம்ஸ் விதவிதமாக சுற்றி வருகிறது.

கேரளா டூரிசம்

கேரளா டூரிசம்

கேரளா டூரிசம் டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெட்டி எடுத்து பெர்னி சேன்டர்ஸ், மூணாறுக்கு வந்து விட்டதால்தான், குளிர் தாங்க முடியாமல் தான் இப்படி உட்கார்ந்து இருக்கிறார் என்று போட்டு விளம்பரப்படுத்தி உள்ளனர். டிரென்ட் எதுவோ அதை பயன்படுத்தி தங்கள் சுற்றுலாவை மேம்படுத்திக்கொள்ள கேரள சுற்றுலாத்துறை இப்படி செய்துள்ளது பலரையும் பாராட்ட வைத்துள்ளது.

English summary
US Senator Bernie Sanders' Presidential inauguration look spawned a ton of internet memes across the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X