வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் விருந்தில் நேர்ந்த பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச்சூடு.. 21 பேர் படுகாயம், ஒருவர் பலி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் தென்கிழக்கு வாஷிங்டனில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ஒரு விருந்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் கோர துப்பாக்கிக்ச்சூட்டில் 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு பெண் காவல்துறை அதிகாரி உயிருக்கு போராடி வருகிறார்.

அமெரிக்காவின் தென்கிழக்கு வாஷிங்டனில் கிரீன்வே சுற்றுப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:30 (இந்திய நேரப்படி இன்று இரவு) மணியளவில் வெவ்வேறு இடங்களில் மூன்று மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

US Shooting : At least 21 people wonded, one fatally, at a party in Washington

இதில் 21 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு இளைஞன் உயிரிழந்தார். இறந்த இளைஞனின் பெயர் கிறிஸ்டோபர் பிரவுன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. விருந்தில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார் என்றும் வாஷிங்டன் டி.சி. காவல்துறைத் தலைவர் பீட்டர் நியூஷாம் கூறினார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள டுபோயிஸ் பிளேஸ் எஸ்.இ.யின் 3300பிளாக்கில் நடந்த விருந்தில் கூடியிருந்த மக்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடந்தது, மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சிதறி ஓடியதால், மர்ம நபர்கள் விரட்டி சென்று துப்பாகிச்சூடு நடத்தியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

புத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்புத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்

படுகாயம் அடைந்தவர்களில் 11 பேர் பெண்கள் என்றும் 7 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மக்களிடம் தாராளமாக புழங்குவதே துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணம் என்று புகார் எழுந்துள்ளது.

English summary
US Shooting At least 21 people wonded, one fatally, at a party in Washington. Eleven of the victims are women. At least seven of those injured were taken to hospitals in critical condition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X