வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

500 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி.. 2.1 பில்லியன் டாலரை கொட்டுகிறது அமெரிக்கா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மருந்து நிறுவனங்களான கிளாசோஸ்மித்க்லைன் (GlaxoSmithKline) மற்றும் சனோஃபி பாஷ்டெர் (Sanofi Pasteur) ஆகியவை 100 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்களை அமெரிக்காவிற்கு வழங்குவதாக அறிவித்துள்ளன.

Recommended Video

    கொரோனா தடுப்பூசி: 2.1 Billion Dollorஐ கொட்டுகிறது America

    மருத்துவ பரிசோதனைகள், உற்பத்தி, தடுப்பூசி வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக அமெரிக்கா 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் வரை வழங்க உள்ளது என்று இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதில், சனோஃபி அதிக நிதியை பெறும்.

    US spends $2.1 billion more over potential COVID-19 vaccine

    அமெரிக்க அரசு, தனது ஆபரேஷன் வார்ப் ஸ்பீட் திட்டத்தின் ஒரு பகுதியாக கூடுதலாக 500 மில்லியன் டோஸ் நீண்ட காலத்திற்கு வழங்க கூடுதல் வழி உள்ளது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் ஒரு பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசியை அமெரிக்கா வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஆபரேஷன் வார்ப் ஸ்பீட் என்ற கொள்கையை அந்த நாட்டு அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, இந்த தடுப்பூசிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது, என்று அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை செயலாளர் அலெக்ஸ் அசார் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

    நீங்கள் சென்னைவாசியா.. அரசு அனுமதிச்சிடுச்சேன்னு உட்கார்ந்து சாப்பிட ஹோட்டலுக்கு இன்று போயிறாதீங்க நீங்கள் சென்னைவாசியா.. அரசு அனுமதிச்சிடுச்சேன்னு உட்கார்ந்து சாப்பிட ஹோட்டலுக்கு இன்று போயிறாதீங்க

    இந்த வார தொடக்கத்தில் பிரிட்டிஷ் அரசு 60 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது அடுத்த ஆண்டின் முதல் பாதியில் வெளியாக கூடும். 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திடம் பிரிட்டன் ஆர்டர் கொடுத்துள்ளது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் பிரிட்டன் மக்களுக்கு தடுப்பூசி பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    கொரோனா தடுப்பூசியின் உலகளாவிய தேவை மிக அதிகமானது. எந்தவொரு தடுப்பூசியும் அல்லது நிறுவனமும் மட்டுமே, உலகளாவிய தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று சனோஃபி பாஸ்டரின் நிர்வாக துணைத் தலைவர் தாமஸ் ட்ரையம்பே கூறியுள்ளார்.

    English summary
    Pharma companies GlaxoSmithKline and Sanofi Pasteur have announced they will supply 100 million doses of its experimental COVID-19 vaccine to the United States.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X