வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விளம்பரங்களில் பாரபட்சம்.. போட்டியாளர்களை ஒடுக்குவதாக கூகுள் மீது அதிரடி வழக்கு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இணையதளத்தில் தனக்குள்ள ஆளுமையை தவறாகப் பயன்படுத்தி, ஆன்லைன் தேடல் மற்றும் விளம்பர சந்தையில் தனது போட்டியாளர்களை ஒடுக்கி நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் கூகுள் செயல்படுவதாக கூறி அதன் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமெரிக்க நீதித்துறை இதுதொடர்பான நடவடிக்கையை எடுத்துள்ளது. கூகுளின் செயல்பாடு அதன் மீது வைத்துள்ள நம்பிக்கையை தகர்க்கும் வகையில் இருப்பதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

US sued Google for antitrust case

இந்த புகார் குறித்து துணை அட்டர்னி ஜெனரல் ஜெஃப் ரோசன் கூறுகையில் இணையத்தில் கூகுள் நிறுவனம் அதன் ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது. கூகுளின் இலக்கு விளம்பர வணிகம் அல்ல. ஆனால் அதன் தேடல் மற்றும் விளம்பரத்தில் தனது போட்டியாளர்களை அது புறம் தள்ளி ஒதுக்கி நடந்து கொண்டுள்ளது. இது பாரபட்சமானது, தவறானது. நம்பிக்கை துஷ்பிரயோகம் ஆகும்.

துர்க்கை ஆக கமலா.. டிரம்பை வதம் செய்வதாக போட்டோ.. மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புதுர்க்கை ஆக கமலா.. டிரம்பை வதம் செய்வதாக போட்டோ.. மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு

கூகுளுக்கு எதிரான வழக்கு அமெரிக்க வரலாற்றில் தொடரப்பட்டுள்ள இரண்டாவது மிகப் பெரிய வழக்காகும். கடந்த 2001-ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் மீது இது போன்ற வழக்கை அமெரிக்கா தொடுத்தது முதல் வழக்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் துணை அட்டர்னி ஜெனரலின் குற்றச்சாட்டுகளை கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சை கூறுகையில் அமெரிக்காவின் இந்த வழக்கு மிகவும் தவறானது. மக்கள் யாரும் கட்டாயப்படுத்தி ககுளைப் பயன்படுத்தவில்லை. சுய விருப்பத்தின் அடிப்படையில்தான் அதை பயன்படுத்துகிறார்கள். அவர்களது நம்பிக்கையை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை என்று விளக்கியுள்ளார்.

அமெரிக்க நீதித்துறையின் இந்த வழக்கில் 11 மாகாணங்கள் இதுவரை தங்களை இணைத்துக் கொண்டுள்ளதால் கூகுளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

English summary
America Government sued Google over monopolising online search in antitrust suit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X