வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனி அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்டபூர்வமானது இல்லை.. 50 ஆண்டு நடைமுறையை மாற்றிய உச்சநீதிமன்றம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. மேலும் இந்த தீர்ப்பு மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சில சட்டங்கள் பிற நாடுகளை ஒப்பிடும்போது முற்றிலும் வேறுபாடாக உள்ளது. இந்தியாவில் கருக்கலைப்பு என்பது சட்டத்துக்கு புறம்பானது.

2024 தேர்தலுக்குப் பின் கர்நாடகா 2 ஆக, மகாராஷ்டிரா 3 ஆக உ.பி.4 ஆக பிரியும்-பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி 2024 தேர்தலுக்குப் பின் கர்நாடகா 2 ஆக, மகாராஷ்டிரா 3 ஆக உ.பி.4 ஆக பிரியும்-பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி

இத்தகைய செயலில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை என்பது தேசிய அளவில் சட்டபூர்வமாக நடைமுறையில் இருந்தது.

சட்டப்பூர்வமான கருக்கலைப்பு

சட்டப்பூர்வமான கருக்கலைப்பு

அதாவது அமெரிக்காவில் 1973ல் ரோ மற்றும் வேட் இடையிலான வழக்கில், ‛'கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை. அது அரசியலமைப்பு உரிமை' என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதேபோல 1992ல் பெனிசில்வேனியா மற்றும் கேசே இடையேயான வழக்கில், ‛‛22 முதல் 24 வார கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாக கலைத்து கொள்ளலாம்'' என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்மூலம் அமெரிக்காவில் கருக்கலைப்பை சம்பந்தப்பட்ட பெண்களே டாக்டர்கள் உதவியுடன் செய்து கொண்டனர்.

 உச்சநீதிமன்றத்தில் வழக்கு

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்நிலையில் 15 வாரங்களுக்கு பிந்தைய சிசுவை கருக்கலைப்பு செய்ய மிஸ்ஸிசிப்பி மாகாணம் தடை விதித்தது. இதனை எதிர்த்து டாப்ஸ் மற்றும் ஜாக்சன் மகளிர் சுகாதார அமைப்பு இடையிலான வழக்கு அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டு வந்த அரசியலமைப்பு உரிமைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.

 அரசியலமைப்பு வழங்கவில்லை

அரசியலமைப்பு வழங்கவில்லை

இந்த வழக்கின் தீர்ப்பின்போது, ‛‛கருக்கலைப்புக்கான உரிமையை அரசியலமைப்பு வழங்கவில்லை. அதோடு கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் திரும்ப வழங்கப்பட வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. அதோடு கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே மேற்கொள்ள இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறியுள்ளது.

36 மில்லியன் பெண்கள்

36 மில்லியன் பெண்கள்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் சட்டங்களை 13 மாகாணங்கள் இயற்றியுள்ளன. பிற மாகாணங்கள் அதற்கான செயல்பாட்டை துவக்கி உள்ளன. இதன்மூலம் கருத்தரிக்கும் வயதுடைய சுமார் 36 மில்லியன்(ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) பெண்கள் கருக்கலைப்புக்காக செல்ல முடியாத நிலையை இந்த தீர்ப்பு ஏற்படுத்தி உள்ளது என பிளாண்ட் பேரன்ட்ஹுட் என்ற கருக்கலைப்பு சேவை வழங்கும் சுகாதார அமைப்பு கூறுகிறது.

ஜோபைடன் எதிர்ப்பு

ஜோபைடன் எதிர்ப்பு

இதற்கிடைய உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோபைடன் கடுமையாக எதிர்த்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இந்த தீர்ப்பு மூலம் ஏழைப்பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனது பார்வையில் இந்த நாள் மோசமான நாளாகும்'' என குறிப்பிட்டுள்ளார்.

English summary
The Supreme Court of the United States has overturned a 50-year-old order legalizing the right to abortion nationwide. The ruling has thus become an opportunity for individual provinces to exercise their power to prohibit abortion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X