வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொறுத்தது போதும்.. பொங்கிய அமெரிக்கா.. சீன விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அதிரடி தடை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்த நாட்டைச் சேர்ந்த விமானங்களை தங்கள் நாட்டுக்குள் இயக்குவதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஜூன் 16ம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வர உள்ளது.

யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் ஆகிய இரு அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா ஏற்கனவே தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்குமாறு அந்த இரு விமான நிறுவனங்களும் கேட்டுக் கொண்ட போதிலும் இதுவரை அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்துள்ள டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இரு நாடுகளிடையேயான இந்த விமான போக்குவரத்து உரசல் என்பது மார்ச் மாதம் 26ஆம் தேதி முதல் துவங்கி விட்டது.

சீனா ஆப்கள் வேண்டாம்.. remove china apps-க்கு பலத்த வரவேற்பு.. 50- லட்சத்தினை தாண்டி டவுன்லோடு..!

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

சீனாவின் விமான ஒழுங்குமுறை ஆணையம் வெளிநாடுகளிலிருந்து இயக்கக்கூடிய விமானங்களுக்கான கட்டுப்பாட்டை அப்போதுதான் விதிக்க துவங்கியது. ஒரு வாரத்துக்கு ஒரு வெளிநாட்டு விமானம் என்ற அளவுக்கு மட்டும் தான் அனுமதிக்க முடியும் என்று அது கூறியது.

அமெரிக்க விமானங்கள்

அமெரிக்க விமானங்கள்

இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவிலிருந்து, சீனாவுக்கு இயங்கக்கூடிய 3 விமான நிறுவனங்களும் தங்களது இயக்கத்தை நிறுத்திக் கொண்டன. இதன் பிறகு, அந்த விமான நிறுவனங்களின் இயக்கத்துக்கு சீனா தடை விதித்தது. அதேநேரம் அமெரிக்கா நகரங்களுக்கு சீன நாட்டு விமானங்கள் பறந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதிக விமானங்கள்

அதிக விமானங்கள்

ஜனவரி மாத நிலவரப்படி, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் பரஸ்பரம் வாரத்துக்கு சுமார் 325 விமானங்களை இயக்கி வந்தன. ஆனால் பிப்ரவரி மாத நடுப்பகுதியில் அது 20 என்ற அளவுக்கு குறைந்தது. அதுவும்கூட, அனைத்துமே சீனாவைச் சேர்ந்த விமான நிறுவனங்களின் இயக்கம்தான் என்று கூறப்படுகிறது.

ஒப்பந்தத்தை மீறிய சீனா

ஒப்பந்தத்தை மீறிய சீனா

மார்ச் மாதம் சீனா இந்த முடிவு எடுத்திருந்தாலும் கூட இப்போது பிரச்சனை பெரிதாக காரணம், டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்கள், தங்கள் இயக்கத்தை துவங்குவதற்கு சீனாவிடம் அனுமதி கோரியிருந்தன. அந்த அனுமதி கோரலை, சீனா கண்டுகொள்ளவில்லை. எனவே 1980ஆம் ஆண்டு விமான போக்குவரத்து ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளது அமெரிக்கா. இதற்கு பதிலடியாக ஜூன் 16ம் தேதியிலிருந்து சீன நாட்டு விமான எதையும் அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதில்லை என்றும், இங்கிருந்து சீனா செல்வதற்கும், சீன விமான நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.

English summary
The Trump administration on Wednesday said it planned to block Chinese airlines from flying into or out of the United States starting on June 16.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X