வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஷ்யா, சீனா நிறுவனங்கள் செயல்பட தடை.. அணு ஒப்பந்தத்தில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அடுத்த அதிரடி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஈரான் அணுசக்தி நடவடிக்கை தொடர்பாக அளிக்கப்பட்ட மேலும் ஒரு சலுகைகளையும் நீக்கியுள்ளது அமெரிக்கா. இதனால் கிட்டத்தட்ட, அவ்விரு நாடுகள் இடையேயான ஒப்பந்தம் முழுக்க முடிவுக்கு வந்துவிட்டது.

Recommended Video

    US to end sanctions waivers on Iran nuclear sites

    2015ம் ஆண்டு ஒபாமா ஆட்சி காலத்தில் அமெரிக்கா-ஈரான் நாடுகள் இடையே இந்த உடன்படிக்கை கையெழுத்தானது. ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்கியதற்கு பதிலாக, தனது அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டது ஈரான்.

    அதன் விளைவாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் ஈரான் அணு சக்தியை அணு குண்டுகள் தயாரிக்காமல் தடுக்கப்படும் என்று அமெரிக்கா அப்போது கூறியது.

    நாங்க ரெடி.. இந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் 'என்ட்ரியாகும்' அமெரிக்கா.. ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு நாங்க ரெடி.. இந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் 'என்ட்ரியாகும்' அமெரிக்கா.. ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

    பொருளாதார தடை

    பொருளாதார தடை

    ஈரான் இந்த ஒப்பந்தத்திற்கு இணங்கினாலும், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக கூறி, 2018ம் ஆண்டு, ஒப்பந்தத்திலிருந்து விலகி அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தினார்.

    பிற நாடுகள்

    பிற நாடுகள்

    இருப்பினும், ரஷ்ய, சீன மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களை முக்கியமான ஈரானிய அணுசக்தி தளங்களில் வேலை செய்ய அனுமதியளித்திருந்தது அமெரிக்கா. இப்போது அந்த சலுகையையும் நீக்கியுள்ளது அமெரிக்கா. ஒபாமா காலத்தில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் 3.67 சதவீத தூய்மைக்கு மேல் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை 15 ஆண்டுகளாக உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அணு சக்தி விரிவாக்கம்

    அணு சக்தி விரிவாக்கம்

    ஆனால் இந்த ஒப்பந்தம் தெஹ்ரான் ஆராய்ச்சி உலை செயல்பாட்டிற்கு தேவையான 20 சதவீத செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இறக்குமதி செய்ய ஈரானுக்கு அதிகாரம் கொடுத்திருந்தது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ வெளியிட்ட ட்வீட்டர் பதிவில், ஈரானின் தொடர்ச்சியான அணுசக்தி விரிவாக்கத்தின் காரணமாக ஒத்துழைப்பு முடிவுக்கு வர வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

    அதிகபட்சம் 90 நாட்கள்

    அதிகபட்சம் 90 நாட்கள்

    அதேநேரம், இந்த உத்தரவை செயல்படுத்த அமெரிக்கா 60 நாட்கள் அவகாசம் அளிக்கும் என்று அந்த நாட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.
    புஷேரில் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட அணு உலைக்கான வெளியேறுதல் கால சலுகை 90 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

    English summary
    The United States has decided to end sanctions waivers allowing Russian, Chinese and European firms to continue work at certain Iranian nuclear sites, a US official and another source familiar with the matter told the Reuters News Agency on Wednesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X