வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீன ஊடகங்களுக்கு எதிராக அமெரிக்கா எடுத்த அதிரடி நடவடிக்கை.. மோசமாகும் இருநாட்டு உறவு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்கா அரசு, திங்களன்று நான்கு சீன ஊடகங்களை "வெளிநாட்டுக்காக ராஜதந்திர வேலை செய்யும் நிறுவனங்கள்" என்று கருத வேண்டிய அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது. ஏனெனில் அரசாங்கத்துடனும் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் அவர்கள் வைத்திருக்கும் உறவுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் மோசமாக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Recommended Video

    China ஊடகங்களுக்கு எதிராக America எடுத்த அதிரடி நடவடிக்கை

    கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் சீனாவைச் சேர்ந்த நான்கு ஊடங்களை "வெளிநாட்டு பணிகள்" என்று கருத வேண்டிய அமைப்புகளின் பட்டியலில் அமெரிக்க அரசு சேர்த்துள்ளது.

    சி.சி.டி.வி உட்பட நான்கு ஊடகங்களில் அமெரிக்காவில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் பட்டியலையும், அவர்களின் சொத்துக்கள் பட்டியலையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமெரிக்கா வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஐநாவில் இந்தியரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க முயன்ற பாகிஸ்தான்.. தடுத்து நிறுத்திய அமெரிக்கா ஐநாவில் இந்தியரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க முயன்ற பாகிஸ்தான்.. தடுத்து நிறுத்திய அமெரிக்கா

    வெளியேற தடையில்லை

    வெளியேற தடையில்லை

    எனினும் யாரும் அமெரிக்காவை விட்டு வெளியேற உத்தரவிடப்படவில்லை, அவர்களின் நடவடிக்கைகளுக்கு வரம்புகள் அறிவிக்கப்படவில்லை. ஆனால் மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் பணியாற்ற வந்த ஊழியர்களை ஒரே மாதத்தில் பணியில் வைக்க வேண்டாம் என நான்கு சீன ஊடக அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    ஊடகங்கள் அல்ல

    ஊடகங்கள் அல்ல

    இந்த நான்க ஊடக நிறுவனங்களும் அடிப்படையில் சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசாங்கத்திற்கான ஊதுகுழலாக இருக்கின்றன, முறையான செய்தி நிறுவனங்கள் அல்ல என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வெளிப்படையான அறிவிப்பு

    வெளிப்படையான அறிவிப்பு

    "கம்யூனிஸ்ட் கட்சி இந்த ஊடக நிறுவனங்களின் மீது செயல்பாட்டுக் கட்டுப்பாட்டை மட்டும் பயன்படுத்துவதில்லை, ஆனால் அவற்றின் உள்ளடக்கம் மீது முழு தலையங்கக் கட்டுப்பாட்டையும் கொண்டுள்ளது" என்று கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி மாநிலச் செயலாளர் டேவிட் ஸ்டில்வெல் கூறினார். வெளிநாடுகளுக்காக வேலை பார்க்கும் நிறுவனங்கள் என்ற இந்த அறிவிப்பு வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கான ஒரு தெளிவான படிநிலை என்றும் அவர் கூறினார்.

    அபத்தமானது

    சி.சி.டி.வி, சீனா செய்தி சேவை, பீப்பிள்ஸ் டெய்லி செய்தித்தாள் மற்றும் குளோபல் டைம்ஸ் (China News Service, the People's Daily newspaper and the Global Times) ஆகியவை வெளிநாடுகளுக்காக வேலை பார்க்கும் நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ள நான்கு ஊடகங்கள் ஆகும். இதனிடையே குளோபல் டைம்ஸை "சந்தை சார்ந்த ஊடகங்கள்" என்று விவரிக்கும் அமெரிக்க முடிவு "அபத்தமானது" என்று அதன் தலைமை ஆசிரியர் ஹு ஜிஜின் கூறினார். சீன கம்யூனிஸ்ட் கட்சியால் வெளியிடப்பட்ட பீப்பிள்ஸ் டெய்லிக்கு இந்த குளோபல் டைம்ஸ் பத்திரிகை சொந்தமானது ஆகும்.

    சீனா அமெரிக்கா உறவு

    சீனா அமெரிக்கா உறவு

    எனினும் இந்த சீன ஊடக அமைப்புகளுக்காக அமெரிக்காவில் எத்தனை பத்திரிகையாளர்கள் பணியாற்றுகிறார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பனிப்போரின் போது சோவியத் யூனியனுக்கு (ரஷ்யா) எதிராக அமெரிக்கா இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்தது. அந்த முன்மாதிரியான நடவடிக்கையை அமெரிக்கா தற்பாது சீனாவிற்கு எதிராக பயன்படுத்தி உள்ளது. இது அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவுகளின் கசப்பான நிலையை பிரதிபலிக்கிறது. கொரோனா வைரஸ், வர்த்தகம், மனித உரிமைகள் மற்றும் பிற பிரச்சினைகளில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.

    செய்தி நிறுவனம் அல்ல

    செய்தி நிறுவனம் அல்ல

    இந்த நான்கு செய்தி ஊடகங்களும் அமெரிக்க சட்டத்தின் கீழ் வெளிநாட்டு பணிகள் என்று கருதப்படும். ஏனெனில் அவை சீன மக்கள் குடியரசின் அரசாங்கத்தால் "கணிசமாக சொந்தமானவை அல்லது அவற்றால் கட்டுப்படுத்தப்படுகின்றன", மேலும் அவை பாரம்பரிய செய்தி அமைப்புகளைப் போல கருத்ப்படாது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

    English summary
    US on Monday added four Chinese media outlets to a list of organisations that should be considered "foreign missions"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X