• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஹாங்காங் சீனா பிடியில் இருக்கிறதே.. தனி சலுகை எதற்கு.. ஒப்பந்தங்களை ரத்து செய்து அமெரிக்கா அதிரடி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கைதிகள் ஒப்படைப்பு மற்றும் வரி விலக்குகள் உள்பட ஹாங்காங்குடனான மூன்று இருதரப்பு ஒப்பந்தங்களை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது.

    America VS China | Hong Kong’s special status-ஐ ரத்து செய்த Trump | Oneindia Tamil

    ஹாங்காங் மீது தேசிய பாதுகாப்பு சட்டங்களை சீனா விதித்துள்ளதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

    US Trump administration suspends extradition, tax agreements with Hong Kong

    பிரிட்டீஷிடமிருந்து 1997 ஆம் ஆண்டில் சீனாவின் ஆட்சியின்கீழ் ஹாங்காங் மாற்றியது. அதைத் தொடர்ந்து அதன் சுயாட்சியின் அடிப்படையில் தொடர்ந்து அனுபவித்த சலுகைகளை தொடருவது நியாயமில்லை என்று டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில், ஹாங்காங் மக்களின் சுதந்திரங்களை பறிக்கும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீன அரசு திணித்துள்ளது. எனவே இதற்கு மேலும் ஹாங்காங்கை தனி நிர்வாகமாக கருதி சலுகை தர முடியாது என்று உறுதிபட தெரிவித்துள்ள ட்ரம்ப் நிர்வாகம் சலுகை ஒப்பந்தங்களுக்கு என்ட் கார்டு போட்டுள்ளது.

    உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா.. 2வது கட்டமாக 100 நவீன வெண்டிலேட்டர்களை இந்தியாவுக்கு வழங்கியதுஉதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா.. 2வது கட்டமாக 100 நவீன வெண்டிலேட்டர்களை இந்தியாவுக்கு வழங்கியது

    தப்பியோடிய குற்றவாளிகளை ஒப்படைத்தல், தண்டனை பெற்ற கைதிகளின் இடமாற்றம் மற்றும் சர்வதேச கப்பல் மூலமான வருமானம் மீதான பரஸ்பர வரி விலக்குகள் ஆகிய 3 ஒப்பந்தங்களும் ரத்தாகிறது.

    English summary
    The Trump administration on Wednesday suspended or terminated three bilateral agreements with Hong Kong covering extradition and tax exemptions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X