வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேலையா? கோட்சூட்ஆ? பதவியேற்பின்போது சூசகமாக என்ன சொல்ல போகிறார் கமலா ஹாரிஸ்.. எதிர்பார்ப்பில் மக்கள்

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்கும் போது கமலா ஹாரிஸ் என்ன உடை அணிவார் என்ற விவாதம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரின் பதவியேற்பு விழா நாளை நடைபெறுகிறது. இதனால் அமெரிக்காவே விழாக் கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிபூமஹோபாத்ரா எனும் ஆடை வடிவமைப்பாளர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் கமலா ஹாரிஸ்க்கு ஆடை வடிவமைக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். இதனால் பதவியேற்பு விழாவில் கமலா ஹாரிஸ் சேலை அணிவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பட்டுப் புடவைதான்

பட்டுப் புடவைதான்

கமலா ஹாரிஸின் தாய் சாந்தா கோபாலன் சென்னையில் பிறந்தவர். அவரது தந்தை ஜமைய்காவை சேர்ந்தவர். எனவே இந்திய பாரம்பரிய உடையை, அதாவது பனாரஸ் பட்டுப்புடவை போன்ற உடையைத்தான் கமலா தனது பதவியேற்பு விழாவில் அணிவார் என ஒரு சாரார் கூறி வருகின்றனர்.

கோட்சூட் தான்

கோட்சூட் தான்

ஆனால் இன்னும் ஒரு சிலரோ, 'இல்லை இல்லை.. கமலா ஹாரிஸ் பெரும்பாலும் கோட்சூட் அணிந்து தான் காணப்படுகிறார். எனவே பதவியேற்பு விழாவிலும் அவர் அதே மாதிரியான உடையைத் தான் அணிந்து வருவார்' என உறுதியாகக் கூறி வருகின்றனர். எனவே இது நெட்டிசன்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அரசியல் காரணம்

அரசியல் காரணம்

எத்தனையே முக்கிய பிரச்சினைகள் இருக்கும் போது கமலா ஹாரிஸ் சேலை அணிவாரா இல்லை கோட்சூட் போடுவாரா என்பது இப்போது ரொம்ப முக்கியமா என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் இந்த விவாவத்தின் பின்னணியில் முக்கிய அரசியல் காரணம் ஒன்றும் உள்ளது.

கணிக்க முடியும்

கணிக்க முடியும்

அதாவது 'பதவியேற்பு விழாவில் கமலா அணியும் உடையை வைத்து தான் அவரது நிர்வாகம் என்பது இருக்கும் என்பதை கணிக்க முடியும். ஒருவேளை அவர் சேலை அணிந்தால், அமெரிக்காவில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பார் என உணர முடியும்', என தங்கள் பக்க வாதத்திற்காக நெட்டிசன்களின் பதில்களையும் பார்க்க முடிகிறது.

English summary
The question of whether or not US Vice President-elect Kamala Harris will wear a saree on Inauguration Day to invoke her Indian heritage is one that is currently being hotly debated on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X