வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கலங்க வைத்த கமலா ஹாரிஸ்.. பெற்ற தாய்க்கு முதல் மரியாதை.. வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற சாதனை படைத்துள்ள 'தமிழச்சி' கமலா ஹாரிஸ், தனது தாய்க்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். பெண்களின் சம உரிமைக்காக போராடிய, அனைத்து பெண்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அதிபராக பதவியேற்கும் சில மணி நேரங்கள் முன்பாக, இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார், கமலா ஹாரிஸ். அதில் தனது தாயுடன் குழந்தையாக இருந்த படங்களும் இடம் பெற்றுள்ளன.

பெண்களின் சம உரிமைக்காக போராடிய பல பெண்களும் இதில் இடம் பிடித்துள்ளனர். வீடியோவில் கமலா ஹாரிஸ் கூறியதை நீங்களே பாருங்கள்.

 ஷியாமளா கோபாலன்

ஷியாமளா கோபாலன்

நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு முக்கியமான காரணமாக இருந்த ஒரு பெண்ணைப் பற்றி பேசப்போகிறேன். அது எனது தாய் ஷியாமளா கோபாலன் ஹாரிஸ். எப்போதுமே அவர் எங்கள் இதயத்தில் நிறைந்திருக்கிறார். 19 வயதில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு எனது தாய் வந்தபோது, அவர் மகள், இந்த நாட்டின் துணை அதிபராக பதவி ஏற்பார் என்று அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால் அமெரிக்கா என்ற இந்த நாட்டில் இதுபோன்ற சாதனை சாத்தியப்படும் என்பதை அவர் உறுதியாக நம்பியிருந்தார்.

பெண்கள் இந்த நாட்டின் கண்கள்

பெண்கள் இந்த நாட்டின் கண்கள்

நான் இந்த நேரத்தில் எனது தாயை நினைவு கூறுகிறேன். தலைமுறை தலைமுறையாக பாடுபடும் பெண்களை நினைவு கூறுகிறேன். கருப்பின பெண்கள், ஆசிய பெண்கள், வெள்ளை இனப் பெண்கள், லத்தீன் இனப் பெண்கள், அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட பெண்கள் என இந்த நாட்டின் வரலாறு முழுக்க நிறைந்து காணப்பட கூடிய பெண்கள் அனைவரையும் நான் இந்த நல்ல தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் அனைவரும் தான் இந்த தருணம் உருவாக வழி ஏற்படுத்தி கொடுத்தவர்கள்.

உங்களின் பிரதிநிதிதான் நான்

உங்களின் பிரதிநிதிதான் நான்

போராட்டம் மட்டும் தியாகத்தின் மூலம் பெண்களுக்கு, சமத்துவம், சுதந்திரம், அனைவருக்குமான நீதி ஆகிவற்றை பெற்றுக் கொடுத்துள்ளனர். கருப்பின பெண்களுக்கும் சேர்த்து இந்த உரிமைகளை அவர்கள் ஈட்டித் தந்துள்ளனர். கருப்பினப் பெண்கள் நமது ஜனநாயகத்தில் முதுகெலும்பாக இருந்துள்ளனர். பல நூற்றாண்டுகளாகப் போராடி பெண்களுக்கு வாக்குரிமை பெற்று தந்த அனைத்து பெண்களும் மற்றும் இன்னமும் கூட தங்களது அடிப்படை உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் பெண்களுக்குமான பிரதிநிதியாக நான் இங்கு நிற்கிறேன்.

தோள் மீது ஏறி நிற்கிறேன்

தோள் மீது ஏறி நிற்கிறேன்

அவர்களது உறுதியான நோக்கம், அவர்களது விடாப்பிடி குணம் ஆகியவற்றால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. அவர்களின் தோள் மீது நான் இப்போது ஏறி நிற்கிறேன். இவ்வாறு தனது தாய் உட்பட அனைத்துப் பெண்களுக்கும் உருக்கமான வீடியோவில் புகழாரம் சூட்டி, உங்களால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறேன், என்று நன்றிக்கடனை செலுத்தியுள்ளார் கமலா ஹாரிஸ்.

English summary
US Vice-President Kamala Harris has released a video and thank her mother and other women who fought for the equal rights.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X