வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்கா: 25-வது சட்ட திருத்தம் மூலம் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய துணை அதிபர் மைக் பென்ஸ் மறுப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டொனால்ட் டிரம்ப்பை 25-வது சட்ட திருத்தம் மூலம் நீக்கும் முயற்சிகளுக்கு துணை அதிபர் மைக் பென்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் டிரம்ப்பை பதவி நீக்க கோரும் தீர்மானத்தை கையில் எடுத்துள்ளது ஜனநாயக கட்சி.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறைகளில் 5 பேர் பலியாகினர்.

US Vice President Mike Pence refuses to invoke 25th Amendment against Donald Trump

ஜோ பிடன், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள நிலையில் டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிரம்ப்பை அதிபர் பதவியில் இருந்து நீக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

முதல் கட்டமாக 25-வது சட்ட திருத்தத்தின் மூலமாக டிரம்ப்பை பதவி இழக்கச் செய்து துணை அதிபர் மைக் பென்ஸை பதவியேற்க செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக எம்.பி.க்களுக்கு சபாநாயகர் நான்சி பெலோசி கடிதம் அனுப்பி இருக்கிறார்.

இக்கடிதத்துக்கு பதிலளித்து துணை அதிபர் மைக் பென்ஸ், நான்சி பெலோசிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் 25-வது சட்ட திருத்தம் மூலமாக டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மைக் பென்ஸ்.

25-வது சட்ட திருத்தத்தைப் பயன்படுத்த பென்ஸ் எதிர்ப்பு தெரிவித்துவிட்ட நிலையில் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை கையில் எடுத்துள்ளனர் ஜனநாயகக் கட்சியினர். ஏற்கனவே தம் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தால் மோசமான விளைவுகள் நாட்டில் உருவாகும் என டிரம்ப் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
US Vice President Mike Pence had refused to invoke 25th Amendment against Donald Trump.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X