வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிரம்பை ஒதுக்கும் மைக் பென்ஸ்.... ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாக தகவல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஜோ பைடன் அமெரிக்க அதிபராகப் பங்கேற்கும் விழாவில் தற்போது துணை அதிபராகவுள்ள டிரம்ப் ஆதரவாளரான மைக் பென்ஸ் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்தாண்டு நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிபர் டிரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

தேர்தல் முடிவுகளை மாற்ற அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். இருப்பினும், அவை எதுவும் பலனளிக்கவில்லை. வரும் 20ஆம் தேதி ஜோ பைடன் அமெரிக்காவின் 46ஆவது அதிபராகப் பதவியேற்கவுள்ளார்.

டிரம்ப் புறக்கணிப்பு

டிரம்ப் புறக்கணிப்பு

அமெரிக்காவில் வழக்கமாக புதிய அதிபர் பதவியேற்கும் விழாவில், வெளியேறும் அதிபரும் பங்கேற்பார்கள். ஆனால், இதற்கு மாறாக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்கப்போவதில்லை என்று அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இதற்குப் பதிலளித்த பைடன், தனது பதவியேற்பு விழாவை டிரம்ப் புறக்கணிப்பதே நல்லது என்று பதிலடி அளித்திருந்தார்.

முற்றும் மோதல்

முற்றும் மோதல்

கடந்த சில நாட்களாகவே டிரம்பின் முக்கிய ஆதரவாளராக கருதப்பட்ட துணை அதிபர் மைக் பென்ஸுக்கும் டிரம்பிற்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஜோ பைடனின் வெற்றியைத் துணை அதிபர் மைக் பென்ஸ் அங்கீகரிக்க மறுக்க வேண்டும் என்று டிரம்ப் வெளிப்படையாகவே அழுத்தம் கொடுத்தார். இருப்பினும், தான் அமெரிக்க அரசியலமைப்பின்படி செயல்படுவேன் என்று மைக் பென்ஸ் கூறியதால் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.

அதிகரிக்கும் இடைவெளி

அதிகரிக்கும் இடைவெளி

இந்த நிகழ்வை தொடர்ந்தே இருவருக்கும் இடையே இடைவெளி அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் டிரம்பின் மிக முக்கிய ஆதரவாளராக மைக் பென்ஸ் கருதப்பட்டார். டிரம்பை அவர் எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்கவில்லை. இருப்பினும், கடந்த சில வாரங்களாக டிரம்பின் அழுத்தம் அதிகரித்ததாலேயே டிரம்ப் உடனான தனது உறவை பென்ஸ் குறைத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பதவியேற்பு விழாவில் மைக் பென்ஸ் பங்கேற்பது தங்களுக்குப் பெருமைதான் என்றும், அவரது வருகையை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் ஜோ பைடன் நேற்று கூறியிருந்தார்.

மைக் பென்ஸ் பங்கேற்பு

மைக் பென்ஸ் பங்கேற்பு

ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து பைடன் இதுவரை வெளிப்படையாக ஏதுவும் அறிவிக்கவில்லை. இருப்பினும், பதவியேற்பு விழாவில் துணை அதிபர் மைக் பென்ஸ் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்றே அந்நாட்டின் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டிரம்ப் பதவிநீக்கம்

டிரம்ப் பதவிநீக்கம்

மேலும், அமெரிக்க நாடாளுமன்றம் மீதான வன்முறை தூண்டியதற்காக டிரம்பை அதிபர் பதவியிலிருந்து நீக்கும் மசோதாவையும் திங்கட்கிழமை முன்மொழிய உள்ளதாக ஜனநாயகக் கட்சியினர் அறிவித்துள்ளனர். டிரம்ப் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படும்பட்சத்தில், எஞ்சிய நாட்களுக்கு அதிபரின் அதிகாரங்கள் மைக் பென்ஸுக்கு வழங்கப்படும்.

English summary
Mike Pence will attend the upcoming inauguration of Joe Biden, multiple media reports said Saturday, the vice president becoming the latest longtime loyalist to abandon an increasingly isolated President Donald Trump.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X