வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெடித்தது இன்னொரு குழப்பம்.. தப்பு தப்பா தகவல் பரப்பறாங்க.. கன்னத்தில் கை வைக்கும் அமெரிக்கர்கள்!

இன்னொரு குழப்பம் அமெரிக்காவில் வெடித்துள்ளது

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க மக்களுக்கு டிரம்ப் ஒரு குழப்பம் என்றால் இன்னொது புதுக் குழப்பும் இப்போது சேர்ந்திருக்கிறது. அதாவது, அரசு குறித்தும், அரசியல் குறித்தும் தவறான தகவல்கள் நிறைய வருவதால் எதை நம்புவது, எதை நம்பாமல் இருப்பது என்று தெரியாமல் அவர்கள் குழம்பிப் போயுள்ளனராம்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். அதேபோல துணை அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் மைக் பென்ஸும் மோதுகின்றனர்.

US voters dont have trust in poll facts

இந்த நிலையில் தேர்தல் தொடர்பான புள்ளி விவரங்கள் கருத்துக் கணிப்புகள் போன்றவற்றில் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறதாம். இதுதொடர்பாக அசோசியேட் பிரஸ்ஸும், நார்க் பொது கருத்துக் கணிப்பு ஆய்வு மையமும், அமெரிக்கா பேக்ட்ஸும் இணைந்து ஒரு கருத்துக் கணிப்பை நடத்தின.

அதில், வாக்காளர்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. சரியான தகவல்களைத்தான் நாங்கள் பெறுகிறோமா என்று வாக்காளர்களுக்கு சந்தேகமும், குழப்பமும் உள்ளது. வேட்பாளர்கள் குறித்து தங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் உண்மையானதா, சரியானதா என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தல்.. டிரம்புக்கு கிடைத்த கடைசி பெஸ்ட் சான்ஸ்.. பிடனுக்காக வரும் ஓபாமா.. செம்ம! அமெரிக்க அதிபர் தேர்தல்.. டிரம்புக்கு கிடைத்த கடைசி பெஸ்ட் சான்ஸ்.. பிடனுக்காக வரும் ஓபாமா.. செம்ம!

கற்பனைக்கு எட்டாத வகையில் தவறான தகவல்கள் பரவி வருவதாக வாக்காளர்கள் கருதுகின்றனர். இதுகுறித்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனின் ஆதரவாளரான 34 வயது லியானா பிரைஸ் என்ற நர்ஸ் கூறுகையில், தேர்தலில் இந்த தவறான தகவல்கள் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. என்னதான் தகவல்கள் கொடுக்கப்பட்டாலும் அதை மக்களும் தற்போது நம்பத் தயாராக இல்லை.

அரசு தொடர்பாக வரும் 10 தகவல்களில் 8 தவறான தகவல்களையே பரப்புகின்றன. இதுதான் பெரிய பிரச்சினையாக உள்ளது. அரசியல் குறித்தும், தேர்தல் குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் பல தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இதனால் தேர்தல் மீதான நம்பிக்கை தகரும் அபாயம் உள்ளது. ஒரு ஜனநாயக நாட்டுக்கு இது பொருத்தமற்றது என்றார் அவர்.

நம்ம ஊரில் கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் மக்கள் மீது கருத்துக்களைத் திணிப்பது போல அமெரிக்காவிலும் இப்போது கிளம்பி விட்டார்கள் போல. அதாவது அமெரிக்காவும் இந்தியா போல மாறி வருகிறது. வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அனுகூலம் அடையும் வேலையில் அமெரிக்கர்களும் இப்போது தேறி வருகின்றனர் போலும். பார்க்கலாம்.. டிரம்ப்பா, பிடனா என்று.

English summary
US voters dont have trust in poll facts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X