வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்க ரெடி.. இந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் 'என்ட்ரியாகும்' அமெரிக்கா.. ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையேயான பதட்டத்தை குறைப்பதற்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அந்த நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே லடாக் எல்லை பிரச்சனை கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இரு நாடுகளும் தங்கள் நாட்டு எல்லைகளில் ராணுவத்தை குவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்றிரவு பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

அறிவாலயம் டூ கமலாலயம்... பாஜகவில் இணைகிறாரா கே.பி.ராமலிங்கம்..?அறிவாலயம் டூ கமலாலயம்... பாஜகவில் இணைகிறாரா கே.பி.ராமலிங்கம்..?

ட்வீட்

ட்வீட்

இது போன்ற பரபரப்பான சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில் அவர், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால், எல்லை பிரச்சினை தொடர்பாக அந்த இரு நாடுகள் நடுவே எழுந்துள்ள கொந்தளிப்பு நிலையை சரி செய்வதற்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய தயாராக இருக்கிறது. நன்றி! இவ்வாறு டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

இவர் ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அறிவித்து இருந்தார். ஆனால், உடனடியாக இதை இந்தியா ஏற்க மறுத்தது. வெளிப்படையாக பிரதமர் நரேந்திர மோடியும் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

பதில்

பதில்

இப்போது சீனா இடையேயான பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்து வைக்க தயாராக இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில் இந்திய தரப்பில் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. விரைவில் பதில் தெரிவிக்கப்படும் என்று உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Recommended Video

    எல்லையில் 3 கி.மீ. தொலைவுக்குள் ஊடுருவிய சீன ராணுவம் ? | Oneindia Tamil
    அமெரிக்கா பஞ்சாயத்து

    அமெரிக்கா பஞ்சாயத்து

    கொரோனா வைரசை, சீன வைரஸ் என அழைத்து சீனாவை சீண்டி வருகிறார் ட்ரம்ப். சீனா ஹாங்காங்கில் காட்டும் கெடுபிடிக்கு எதிராக அமெரிக்கா தனது நிலைப்பாட்டை விரைவில் எடுக்க உள்ளது எனவும் அறிவித்தார். ஆனால், இப்போது இந்தியா-சீனா விவகாரத்தில் வெள்ளைக்கொடி கொண்டுவர ரெடியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    Take a Poll

    English summary
    We have informed both India and China that the United States is ready, willing and able to mediate or arbitrate their now raging border dispute. Thank you!, says Donald Trump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X