வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 பேரும் வாங்க.. நான் சொல்றதை கேளுங்க.. இந்தியா பாகிஸ்தானை கூல் செய்ய களமிறங்கும் யுஎஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீர் விஷயத்தை நீங்களே உட்கார்ந்து பேசிக்கோங்க - பிரான்ஸ் அதிபர்- வீடியோ

    வாஷிங்டன்: காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க இருவருக்கும் சேர்த்து அமெரிக்கா வியூகம் வகுத்து வருகிறது.

    ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.

    இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வர உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. ஆனால் எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.

    கவலை

    கவலை

    இதனால் கடும் கோபம் கொண்ட பாகிஸ்தான் எல்லை தாண்டுவது , துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. இதனால் இந்திய எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

    அந்நாட்டிற்கு

    அந்நாட்டிற்கு

    இந்த நிலையில் காஷ்மீரில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க அமெரிக்கா இரு வியூகங்களை வகுத்து வருகிறது. இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில் எல்லை தாண்டி ஊடுருவுதல், இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரில் தீவிரவாத செயல்களுக்கு நிதி அளித்தல், ஆயுதங்களை வழங்குதல் போன்றவற்றில் பாகிஸ்தான் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என அந்நாட்டை கேட்டு கொள்வது ஆகும்.

    2-ஆவது வியூகம்

    2-ஆவது வியூகம்

    இரண்டாவது வியூகம் ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை எடுத்தல், மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தல், வீட்டுக் காவலில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிப்பது, தொலைத்தொடர்பு சாதனங்களை மீண்டும் தொடங்க அனுமதி அளித்தல் போன்ற செயல்களை இந்தியா செய்ய வேண்டும் என்பது ஆகும்.

    பாகிஸ்தானிடம்

    பாகிஸ்தானிடம்

    மேலும் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி ஊடுருவும் பயங்கரவாதிகளை தடுக்கவும், தீவிரவாதிகளின் செயல்களை வேரறுக்கவும் பாகிஸ்தான் முன் வர வேண்டும் என பாகிஸ்தானிடம் டொனால்ட் டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல் வியூகத்தின் அடிப்படையில் தங்கள் மண்ணை தீவிரவாதிகள் பயன்படுத்துவதை தவிர்க்க பாகிஸ்தான் உறுதியாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது என்று அமெரிக்கா வியூகம் வகுத்து வருகிறது.

    English summary
    The US is working on a two prong strategy to escalate tensions between India na Pakistan on Kashmir issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X