வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐந்தே நிமிடங்களில் கொரோனா வைரஸை கண்டுபிடிக்கும் கருவி.. அமெரிக்க மருத்துவ துறை ஒப்புதல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பாதிப்பு பரவாமல் தடுக்க ஐந்து நிமிடங்களில் கொரோனா வைரஸை கண்டறியும் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை பயன்படுத்த அமெரிக்க மருத்துவ துறை ஒப்புதல் அளித்துள்ளது.

Recommended Video

    கொரோனா பூமியான அமெரிக்கா..தற்போது இப்படித்தான் இருக்கிறது

    அமெரிக்காவில் இதுவைரை 123781 பேர் கொரோனாவால் பாதிதக்கப்பட்டுள்ளனர். அங்கு 2229 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 3238 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர்.

    USA approved emergency use of a new coronavirus test that delivers positive results in 5 minutes

    இந்தியாவைப் போல் ஒட்டுமொத்தமாக லாக் டவுன் செய்யப்படாத நாடு என்றால் அது அமெரிக்காதான். அதீத சுதந்திரம் கொரோனா வைரஸை அந்த நாட்டில் அதிவேகமாக பரவ காரணமாக அமைந்துவிட்டது. இப்போது உலகிலேயே அதிக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் இவ்வளவு வேகமாக பரவ அந்த ஊரின் தட்பவெப்ப நிலையும் (குளிர்காலம்) ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் படுவேகமாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா கடுமையாக திணறி வருகிறது. இந்நிலையில் அபோட் லேபரட்டரிஸ் என்ற நிறுவனம் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறியும் கருவியை கண்டுபிடித்துள்ளது. இதனை சோதனைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து துறை ஒப்புதல் கொடுத்துள்ளது

    இது குறித்து அபோட் லேபரட்டரிஸ் நிறுவனத்தின் துணை தலைவர் ஜான் ரெலஸ் கூறுகையில், கொரோனாவை வைரஸ் விவகாரத்தில் இது குறிப்பிடத்தக்க வளர்ச்சி. இதன் மூலக்கூறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸை தெற்று பற்றிய பாசிட்டிவ் முடிகளை 5 நிமிடங்களிலும், நெகட்டிவ் முடிவுகளை 13 நிமிடங்களிலும் கண்டுபிடிக்க முடியும். இதனை எந்த மருத்துவமனையிலும் செய்து கொள்ள முடியும். அடுத்த வாரம் முதல் நாளொன்றுக்கு 50 ஆயிரம் சோதனகளை மேற்கொள்ள தேவையான கருவிகள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. எங்களது அபோட் நிவனத்தின் பெயரிலேயே இந்த சோதனை செய்து கொடுக்கப்படும்" என்றார்.

    English summary
    USA FDA has approved emergency use of a new coronavirus test that delivers positive results in 5 minutes and negative results in 13
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X