வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முஸ்லிம்களிடம் அச்சத்தை உருவாக்கியிருக்கும் சி.ஏ.ஏ.. அமெரிக்க மத சுதந்திரத்துக்கான ஆணையம் (USCIRF)

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியாவில் முஸ்லிம்களிடம் பரந்துபட்ட அளவில் ஒருவித அச்சத்தை குடியுரிமை சட்ட திருத்தம் உருவாக்கி இருக்கிறது என்று அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாடுகளில் மதசுதந்திரம் குறித்து அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம் (USCIRF) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

USCIRF Releases Factsheet on CAA

இந்திய நாடாளுமன்றத்தில் 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏ.ஏ.) நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தமானது ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு விரைவாக இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது.

இதற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இந்த போராட்டங்களை ஒடுக்க வன்முறைகள் ஏவிவிடப்பட்டுள்ளன. இதேபோல் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கு என்பதும் இந்திய குடியுரிமையை மத அடிப்படையில் பரிசோதிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

Recommended Video

    ஷாகீன் பாக் போராட்ட களத்தில் 2 மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை

    இதனால் இந்திய முஸ்லிம்களிடையே ஒருவித அச்ச உணர்வு அதிகரித்துள்ளது. இவ்வாறு அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம் தெரிவித்துள்ளது.

    English summary
    The United States Commission on International Religious Freedom (USCIRF) today released factsheet on India’s CAA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X