"ரொம்ப குளிருது!" காப்பாளரை கட்டி அணைத்துக் கொண்ட யானைக் குட்டி! க்யூட் வீடியோ
வாஷிங்டன்: யானைகளின் அன்பையும் சுட்டித்தனத்தையும் குழந்தைகளுடன் ஒப்பிடும் அளவுக்கே அதன் செயல்பாடுகள் இருக்கும்.
யானைகளை யாருக்குத் தான் பிடிக்காது. பார்ப்பதற்குப் பிரம்மாண்டமாகத் தோன்றினாலும் யானை எப்போதுமே மனதளவில் குழந்தைகளாகவே தங்களை எண்ணிக் கொள்ளும்!
காட்டில் இருந்தாலும் சரி வன காப்பகத்தில் இருந்தாலும் சரி யானை எப்போதும் தங்கள் சுட்டித் தனத்தைக் குறைத்துக் கொள்ளாது. வளர்ந்த யானைகளும் கூட இதற்கு விதி விலக்கு இல்லை.
திருவானைக்காவல் கோவில் யானை அகிலாவுக்கு நீச்சல்குளம்..கும்மாளம் பார்த்து பக்தர்கள் உற்சாகம்

யானை
அதிலும் காப்பகத்தில் வளரும் யானைகள் எப்போதும் தங்கள் வன காப்பாளர்கள் உடன் நெருக்கமான ஒரு உறவைக் கொண்டு இருக்கும். தினசரி பல மணி நேரம் பாகன் உடன் நேரத்தைச் செயல்படுவதால், இருவருக்கும் பலமான ஒரு பிணைப்பு உருவாகிவிடும். மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருந்தாலும் கூட, பாகன் சொல்வதை மட்டுமே யானைகள் கேட்கும். அதன்படியே நடக்கும்.

காப்பகம்
இதனிடையே குட்டி யானை ஒன்று அதன் காப்பாளரைக் கட்டி தழுவிக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. Sheldrick Wildlife Trust என்ற அமைப்பு தனது இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளது. பதிவிட்ட சில மணி நேரத்திலேயே இந்த வீடியோவை சுமார் 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர், மேலும், பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்தும் வருகின்றனர்,

கட்டி அணைக்கும் வீடியோ
இந்த வீடியோவை பகிர்ந்து அந்த அமைப்பு கேப்ஷனாக, "இது யானை ஒன்றின் கட்டி அணைத்துக் கொள்ளும் அமர்வு. யானை பிறக்கும் போது சுமார் 250 பவுண்டுகள் எடையுள்ளதாக இருக்கும். இருந்த போதிலும், யானையும் குழந்தைகளைப் போலவே நடந்து கொள்ளும். அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி, கட்டித் தழுவுதல் போன்ற பாசத்தை அவை எதிர்பார்க்கும். விலங்குகளை பாதுகாத்து வரும் இதுபோன்ற காப்பாளர்களே யானையைப் பார்த்துக் கொள்வார்கள்.

அன்பு
காட்டில் தனித்து விடப்பட்டு, காப்பகத்திற்கு அழைத்து வரப்படும் விலங்குகளும் கூட ஒரு குடும்பத்தின் அன்பையும் ஆதரவையும் அறிந்து வளர்வது உறுதி செய்யப்படும்" என்று பதிவிட்டு இருந்தது. இந்த வீடியோ உடனடியாக சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவ தொடங்கியது. யானையின் அந்த அன்பையும் அரவணைப்பையும் பெறும் அந்த காப்பாளர் உண்மையாகவே அதிர்ஷ்டசாலி என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ
அந்த வீடியோவில் காப்பாளர் தரையில் படுத்துக் கிடக்கிறார். அருகே வரும் யானை குட்டி தான் 250 பவுண்டு என்பது தெரியாமல் அந்த காப்பாளர் மீது அப்படியே க்யூட்டாக விழுகிறது. தட்டுத்தடுமாறி எழும் அந்த யானை, மீண்டும் மீண்டும் அந்தக் காப்பாளரைக் கட்டித் தழுவிக் கொள்கிறது. அப்போது காவலாளியின் முகத்தில் புன்னகையும் வீடியோவில் தெளிவாகப் பார்க்க முடிகிறது.