வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூரியனுக்கு அருகே ஒளிந்து கொண்டிருக்கும் மேலும் 95 குட்டி கிரகங்கள்.. பலே கண்டுபிடிப்பு!

நாசாவின் தரவுகளை வைத்து சூரியனுக்கு அருகில் உள்ள 95 பழுப்பு நிற குள்ள கிரகங்கள் போன்ற நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் தரவுகளை வைத்து, சூரியனுக்கு அருகில் உள்ள 95 பழுப்பு நிற குள்ள கிரகங்கள் போன்ற நட்சத்திரங்களைக் கண்டு பிடித்துள்ளனர் தன்னார்வலர்கள் சிலர்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பொதுமக்களின் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விஞ்ஞானிகள், மக்கள் விஞ்ஞானிகள் என அழைக்கப்படும் தன்னார்வலர்கள் அடங்கிய குழு ஒன்று நாசாவின் நிதியுதவியுடன் சூர்யக் குடும்பம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது அந்த தன்னார்வலர்கள் குழு சூரியனுக்கு அருகில் 95 பழுப்பு நிற குள்ள கிரகங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது.

அஸ்ஸாம், ஒடிஷாவுக்கு குறி-மியான்மர் எல்லையில் நவீன ராடார்களுடன் காத்திருக்கும் சீனாவின் கழுகு கண்கள்அஸ்ஸாம், ஒடிஷாவுக்கு குறி-மியான்மர் எல்லையில் நவீன ராடார்களுடன் காத்திருக்கும் சீனாவின் கழுகு கண்கள்

இதுதான் பெயர் காரணம்

இதுதான் பெயர் காரணம்

இந்த குள்ள கிரங்கள், நட்சத்திரங்களைப் போல அளவில் பெரியவை கிடையாது. ஆனால் அவை கிரகங்களை விட பல மடங்கு கனமானவை. எனவே தான் இவற்றிக்கு குள்ள கிரங்கள் என பெயர் வைத்துள்ளனர்.

நிரூபணம்

நிரூபணம்

இந்த குள்ள கிரகங்களை வைத்து சூரியனுக்கு அருகில் எத்தனை விதமான விண்மீன்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன என்பதை துல்லியமாக கணிக்க முடியும் என்கிறார்கள் தன்னார்வலர்கள் குழுவை சேர்ந்தவர்கள். மேலும், இந்த கண்டுப்பிடிப்பின் மூலம் சூரியக் குடும்பத்தில் இன்னும் அறியப்படாத பிரதேசங்கள் நிறைந்திருப்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

தட்பவெப்பம்

தட்பவெப்பம்

பொதுவாக இதுபோன்ற கிரகங்கள் அதிக வெப்பம் கொண்டவையாக இருக்கும். ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த குள்ள கிரகங்கள் குளிர்ந்த தன்மையை கொண்டிருப்பதாக நாசா குழு கூறியுள்ளது. குறிப்பாக அதில் உள்ள சில கிரகங்கள் பூமியின் தட்பவெட்ப நிலையை ஒத்திருப்பதாக அக்குழு கூறியுள்ளது.

ஆர்வம்

ஆர்வம்

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பழுப்பு நிற குள்ள கிரகங்களின் தன்மை குறித்து மேலும் ஆராய்ச்சிகளை தொடர தன்னார்வலர்கள் குழு திட்டமிட்டுள்ளது. எனவே சூர்ய குடும்பம் குறித்த அறிப்படாத மேலும் பல தகவல்கள் கிடைக்கக்கூடும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

English summary
In a new study, members of the public including both professional scientists and volunteers discovered 95 brown dwarfs (celestial objects too big to be considered planets and too small to be considered stars) near our sun through the NASA-funded citizen science project Backyard Worlds: Planet 9. They made this discovery with the help of astronomers using the National Science Foundations National Optical-Infrared Astronomy Research Laboratory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X