வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த துப்பாக்கியை எடுத்து உள்ளே வைங்கப்பா.. அதிரடியா களம் குதித்த வால்மார்ட்!

வால்மார்ட் கடைகளில் துப்பாக்கி வியாபாரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பிரபலமான வால்மார்ட் கடைகளில் துப்பாக்கி வியாபாரம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாம்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எல்லோரும் எடுக்க ஆரம்பித்து விட்டனர். தேர்தலுக்குப் பின்னரோ அல்லது தேர்தலின்போதோ கலவரம் வெடித்து விடலாம் என்ற அச்சம் உள்ளது.

Walmart removes guns from sales floor over civil unrest concerns

இதை மனதில் கொண்டு வால்மார்ட் நிறுவனம் தனது கடைகளில் துப்பாக்கி வியாபாரத்தை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. கடைகளில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகளும் அங்கிருந்து அகற்றப்பட்டு வருகின்றன. இதேபோலத்தான் முன்பு கருப்பர் இனத்தவரான ஜார்ஜ் பிளாயிட் வெள்ளை இன போலீஸ்காரரால் கொடூரமாக கொல்லப்பட்ட போது வெடித்த கலவரத்தை தொடர்ந்து வால்மார்ட் கடைகளில் துப்பாக்கிகள் அகற்றப்பட்டன.

போராட்டக்காரர்கள் கடைகளை உடைத்து துப்பாக்கிகளை எடுத்து சென்று வன்முறையில் ஈடுபடலாம் என்ற அச்சமே இதற்கு காரணம். இப்போது தேர்தல் சமயத்திலும் இதுபோல நடந்து விடக்கூடாது என்பதற்காக துப்பாக்கிகளை எடுத்து அகற்றி வருகின்றனராம். தேர்தல் சமயத்தில் அங்கு மக்களிடையே கலவரம் வெடிக்கலாம் என்ற அச்சமும் உள்ளது.

துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவு.. 4 பேர் பலி.. 120 பேர் படுகாயம்துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவு.. 4 பேர் பலி.. 120 பேர் படுகாயம்

இதையடுத்து வால்மார்ட் நிறுவனம் அதிரடியாக தனது கடைகளிலிருந்து துப்பாக்கிகளை எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக இது மேற்கொள்ளப்படுவதாகவும், தேர்தலுக்கு பின்னர்தான் மீண்டும் ஆயுத விற்பனை தொடங்கும் என்றும் வால்மார்ட் தெரிவித்துள்ளது.

English summary
Walmart removes guns from sales floor over civil unrest concerns
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X