வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சர்வதேச உறவு இருக்கட்டும்.. அமெரிக்க உள்நாட்டு பிரச்சனையை முதலில் தீர்ப்போம்.. கமலா ஹாரிஸ் பளீர்!

By Rayar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க மக்கள் விரும்புவதை செய்வதே தங்களுடைய முதன்மையான நோக்கம், அமெரிக்க உள்நாட்டு பிரச்சனையை முதலில் தீர்ப்போம் என்று துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

உள்நாட்டு சவால்களை சமாளிப்பது உலக அரங்கில் அமெரிக்காவை வலுப்படுத்துவதற்கு அடித்தளமாக விளங்கும் என அவர் கூறினார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கைகளை மீண்டும் கட்டமைப்பது அவசியம் என்றும் கமலா ஹாரிஸ் கூறினார்.

26/11.. மறக்க முடியுமா.. சோக நினைவுகளை.. அதிரடி ஆபரேஷனை.. மும்பை தாக்குதல் நினைவு தினம் இன்று!26/11.. மறக்க முடியுமா.. சோக நினைவுகளை.. அதிரடி ஆபரேஷனை.. மும்பை தாக்குதல் நினைவு தினம் இன்று!

அமோக வெற்றி

அமோக வெற்றி

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் - கமலா ஹாரிஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஜோ பிடன் புதிய அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜோ பிடன் ஜனவரி 20-ந்தேதி அதிபராக பதவியேற்கிறார்.

தமிழர்களுக்கு பெருமை

தமிழர்களுக்கு பெருமை

இந்த புதிய அரசு ஆட்சி அதிகார மாற்றத்துக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்திய வம்சாவளி பெண்ணான தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கபட்டது இந்தியா, அமெரிக்கா மட்டுமல்ல, உலக அரங்கில் பெருமையை ஏற்படுத்தி உள்ளது.

கடும் சவால்கள் உள்ளன

கடும் சவால்கள் உள்ளன

இந்த நிலையில் கமலா ஹாரிஸ் ஜோ பிடன் தனது தேசிய பாதுகாப்புக் குழுவை அறிவித்த டெலாவேரின் வில்மிங்டனில் உள்ள தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், வெள்ளை மாளிகையில் நுழையும்போது, தற்போது முன்னிலையில் உள்ள கடும் சவால்கள் எங்களுக்காக காத்திருக்கின்றன என்பதை நாங்கள்(ஜோ பிடன், கமலா ஹாரிஸ்) நன்கு அறிவோம்.

 கொரோனாவை கட்டுக்குள் வைக்க வேண்டும்

கொரோனாவை கட்டுக்குள் வைக்க வேண்டும்

கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவது, நாட்டின் பொருளாதாரத்தை மறு சீரமைப்பு செய்வது, உழைக்கும் மக்களுக்கு அவர்களின் வேலை கிடைப்பதை உறுதிசெய்வது என பல்வேறு சவால்கள் உங்கள் முன் உள்ளன. உள்நாட்டு சவால்களை சமாளிப்பது உலக அரங்கில் அமெரிக்காவின் நிலையை நன்கு மீட்டெடுப்பதற்கும், உலக வரிசையில் அமெரிக்கா முன்னேறுவதற்கும் அவசியமான அடித்தளமாகும் என்பதையும் நன்கு அறிவோம்.

கூட்டாளிகளுடன் நல்லுறவு

கூட்டாளிகளுடன் நல்லுறவு

இந்த சவால்களை சந்திக்க தயாராக உள்ளோம். உள்நாட்டு பிரச்சனையை சரி செய்ய வேண்டும். அமெரிக்காவின் கூட்டணி நாடுகளை மீண்டும் ஒன்றிணைத்து புதுப்பிக்க வேண்டும்; நாட்டின் நலன்களை முன்னேற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை நிறுவனங்களை மீண்டும் பலப்படுத்த வேண்டும்.

எங்களின் நோக்கம்

எங்களின் நோக்கம்

அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கும் காலநிலை மாற்ற சூழலை எதிர்த்து போராட வேண்டும். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை செய்வதே எங்களின் ஒரே நோக்கம். இதைதான் ஜோ பைடனும் விரும்புகிறார் என கமலா ஹாரிஸ் உறுதியுடன் கூறினார்.

English summary
We should solve the domestic issues first says US Vice President-elect Kamala Harris
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X