• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஹவுடி மோடி.. 50,000 இந்தியர்கள்.. முதல்முறையாக ஒரே மேடையில் மோடியுடன் ட்ரம்ப்.. பரபரக்கும் அமெரிக்கா

|

வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 27 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 27 வரை மோடியின் சுற்றுப் பயணம் நிகழ உள்ளது.

இதில் டெக்சாஸில் 'ஹவுடி மோடி' (haudi modi) நிகழ்ச்சியில் பங்கேற்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. அது என்ன ஹவுடி மோடி என்கிறீர்களா. இதோ அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ள அந்த நிகழ்ச்சி பற்றிய ஒரு முன்னோட்டம்.

What is howdy modi event where Donald Trump to share the stage with Narendra Modi

கடந்த மூன்று ஆண்டுகளாக இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஹவுடி மோடி திட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான டாக்டர் ஜிதேந்திர அகர்வால், கூறுகிறார். தேர்தல் முடிந்ததும் நிச்சயமாக இங்கு வருவேன் என்று நரேந்திர மோடி அவருக்கு உறுதியளித்திருந்தார். இந்த நிகழ்விற்கான அதிகாரப்பூர்வ அழைப்பு பிரதமர் மோடிக்கு சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு அனுப்பப்பட்டது.

ஹூஸ்டனில் உள்ள டெக்சாஸ் இந்தியா மன்றம் செப்டம்பர் 22 ஆம் தேதி நரேந்திர மோடிக்கு கவுரவம் அளிக்கும் வகையிில், என்ஆர்ஜி ஸ்டேடியத்தில் ஒரு மாநாட்டை நடத்துகிறது.

மகாராஷ்டிராவில் அரசியலில் பரபரப்பு... சிவசேனாவை வெளுவெளுவென வெளுத்த மோடி!

என்.ஆர்.ஜி ஸ்டேடியம் அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்முறை கால்பந்து மைதானங்களில் ஒன்றாகும். "ஹவுடி, மோடி!" என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்வில் 50,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாப நோக்கற்ற அமைப்பான டெக்சாஸ் இந்தியா மன்றம் இதை உறுதிப்படுத்தியது.

650 க்கும் மேற்பட்ட சமூக நிறுவனங்கள் ஏற்கனவே இந்த திட்டத்திற்கு "வரவேற்பு கூட்டாளர்களாக" கையெழுத்திட்டுள்ளன. வரவேற்பு கூட்டாளர்களில் கையெழுத்திட அமைப்பாளர்கள், வரும் சனிக்கிழமை வரை காலத்தை, நீட்டித்துள்ளனர், மேலும், அவர்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு சிறப்பு இலவச பாஸ் வழங்குவார்கள். இந்த நிகழ்வில் ஒரு கலாச்சார நிகழ்வு மற்றும் மோடியின் உரை நிகழ்ச்சி இருக்கும்.

ஹூஸ்டனில் நன்கு புகழ்பெற்ற இந்திய சமூகத் தலைவரான ஜுகல் மலானி, "ஹவுடி, மோடி!" அமைப்பாளர் குழுவின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாநாட்டை புகழ்பெற்ற என்.ஆர்.ஜி ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று மாலனி கூறினார். இது இந்திய அமெரிக்கர்கள் மற்றும் இந்தியாவின் நண்பர்களின் மிகப்பெரிய சந்திப்பு கூட்டமாக இருக்கும்.

அமெரிக்க ஊடகங்கள், இன்று, ஹவுடி மோடி நிகழ்ச்சி குறித்து டொனால்ட் டிரம்பிடம் கேட்டபோது, ​​பிரதமர் நரேந்திர மோடியுடன் தனக்கு நல்ல உறவு இருப்பதாக கூறினார். மேலும், ஹவுடி மோடியில் சில பெரிய அறிவிப்புகளை நீங்கள் காணலாம் என்று அவர் கூறினார். இருப்பினும், இந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறவில்லை.

செப்டம்பர் 22 அன்று நடைபெறும் இந்த நிகழ்வில் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்வார் என்று கடந்த திங்களன்று வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில், டொனால்ட் டிரம்பைத் தவிர, பல அமெரிக்க எம்பிக்கள், குடியரசுக் கட்சி-ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் பங்கேற்பார்கள். இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்ப்-நரேந்திர மோடி இருவரும், மேடையை பகிர்ந்து கொள்வது இதுவே முதல் முறை.

இந்த திட்டத்தின் கோஷம், "பகிரப்பட்ட கனவுகள், பிரகாசமான எதிர்காலம்" என்பதாகும். பொதுவான குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கான நோக்கத்தையும், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் மாபெரும் ஜனநாயகத்தை ஒன்றிணைப்பதுமே ஆகும். நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டணம் இல்லை. ஆனால் இதற்கு பாஸ் தேவைப்படும். www.howdymodi.org என்ற இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் பாஸ் பெற முடியும். பிரதமராக மோடியின் முதலாவது, ஹூஸ்டன் விஜயம் இதுவாகும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு மோடி பாஜக, பொதுச் செயலாளராக இருந்தபோது, ​​ஸ்டாஃபோர்டில் உள்ள பிஏபிஎஸ் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் திட்டம் தொடர்பாக ஹூஸ்டனுக்கு வந்தார். மோடி ஆதரவாளர்கள் ஏராளமானோர் ஹூஸ்டன் பகுதியில் வசித்து வருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் தேர்தல் பிரச்சாரங்களில் உதவுகிறார்கள்.

மோடி நிகழ்ச்சிக்காக, இப்போதே கட்அவுட்டுகள் அங்கே ஜொலிக்க ஆரம்பித்துவிட்டன.

ஜூன் 5 ஆம் தேதி, சில ஆப்பிள் தயாரிப்புகள் உட்பட மொத்தம் 28 அமெரிக்க தயாரிப்புகளின் கட்டணத்தை இந்தியா அதிகரித்தது. இதைத் தொடர்ந்து டொனால்ட் டிரம்ப் இதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று ட்வீட் செய்திருந்தார். ஆனால் இப்போது மோடியுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்க ட்ரம்ப் சம்மதித்துள்ளார். அதற்கு ஒரு காரணம் உண்டு.

டெக்சாஸ் மாகாணம், அமெரிக்காவின் இரண்டாவது பெரிய மாநிலமாகும். இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு ஆயிரக்கணக்கானோர் வாழ்கின்றனர், இங்கு வாழும் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் பணக்காரர்கள் மற்றும் வணிகத் துறையில் முன்னணியில் உள்ளவர்கள். டொனால்ட் டிரம்பும் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு இதுவே காரணம். அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் அமெரிக்காவில் நடைபெற உள்ளது என்பது இதன் பின்னணி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
What is howdy modi event and it's date? where Donald Trump to share the stage with Narendra Modi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more